மாய உலகில் இருந்து வெளியே வாருங்கள்... !

 


சமீப நாட்களாக ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். எல்லோருடைய தலையும் குனிந்தே இருக்கிறது. யாரைக்கேட்டாலும் பிஸி என்பதுபோல சொல்கிறார்கள். யாரைப்பார்த்தாலும் ஆன்லைனில் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து பேசிக்கொள்வது மிகவும் குறைந்துவிட்டது. மொபைல் போனில் பேசுவது கூட குறைந்துவிட்டது. உண்மையில், உண்மை என்னவெனில் பெரும்பாலோர் ஒரு மாய உலகில் (Illusionary World) வசிக்க துவங்கிவிட்டார்கள். அங்கே , அவர்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன் தொடர்பில் (being in contact) இருப்பது போலவும் , அங்கே அவர்களுக்கு நிறைய வேலை ( seems busy) இருப்பதுபோலவும் நினைத்துக் கொள்கிறார்கள் . அதே நேரம் , ஒரு துக்க வீட்டிற்கு போய்ப்பார்த்தால் அங்கே பத்துபேர் கூட இல்லை. ஒருவர் செத்த அன்று , மாலையே உறவினர்கள் அனைவரும் துக்க வீட்டிலிருந்து ஓடி விடுகிறார்கள்.
( இதே போன்ற கட்டுரையை படிக்க :- Click Here )
மொபைல் போனிலிருந்து ( அல்லது எவ்வித எலக்ட்ரானிக் சாதனத்திலிருந்தும் ), அதுவும் தற்போது மார்க்கெட்டில் வெளிவரும் மொபைல் போன்களில் மின்காந்த கதிர்வீச்சு (Electro Magnetic Radiation) மிக அதிகமென்று சொல்கிறார்கள். மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த புலமும் (Electro Magnetic Field- EMF) அதில் காட்டப்படும் ' உணர்வுகளை தூண்டும்' நிகழ்ச்சிகள்/படங்கள்/அதிக சப்தங்கள் ( ஆபாசப்படங்களை சேர்த்தே) இரண்டும் இணைந்து - மனித மூளை வாயிலாக உடலின் மின்காந்த புலத்தோடு பொருந்திக்கொள்கிறது. இந்நிகழ்வு , ஒருவரை விலங்குகள் கொண்டு பூட்டுவது (Lock or Prison) போன்றது. போதை என்றுகூட சொல்லலாம். மொபைல்போனின் மின்காந்த புலமும் , அதிலிருந்து வரும் உணர்வு தூண்டல்களும் , மனித உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களை (Increase in hormone level) உருவாக்குகிறது. இம்மாற்றம் , நிஜவாழ்க்கையில் கிடைக்காது. எனவே , மொபைல் போனை தொடர்ச்சியாக பயன்படுத்தி பயன்படுத்தி பழகிவிட்ட பின்னர் , நாம் நேருக்குநேர் எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கை சலிப்பு தட்டிவிடும். இந்த நிலை தொடர்ந்தால் - தனிமை உணர்வு (loneliness), விரக்தி(frustration) , எரிச்சல்(irritation) போன்றவை நிச்சயம் ஏற்படும். உடல்நலக்குறைவு ஏற்படும். மொபைல் போன்கள் / இன்டர்நெட் இவற்றிலிருந்து வெளிப்படும் மின்காந்த புலம் மூலமாக மனித நரம்புமண்டலத்தை கட்டுப்படுத்தும் ( manipulating human emotions and behaviour through EMF) திட்டத்துக்கு பல ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு எப்படித்தான் நம்முடைய அவசியமான பணிகளை மேற்கொள்வது? எப்படித்தான் பிறரை தொடர்பு கொள்வது? காலை எழுந்தது முதல் இரவு வரை தேவை இருக்கிறதே? - கேள்விகள் அனைத்திற்கும் பதில் நம்மிடமே இருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான வேலைகளை தவிர, அலுவலக வேலைகளை தவிர , முக்கிய தொடர்பு கொள்ள வேண்டிய காரணங்களை தவிர்த்து - மொபைலில் இருந்து விலகியே இருங்கள். எப்போதெல்லாம் அலைபேசியிலிருந்து விலகியிருக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் விலகி இருங்கள். எப்படி கொஞ்சம் கொஞ்சமாக மொபைலுக்கு அடிமையானமோ , அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அதிலிருந்து மீட்டுக்கொள்ளலாம். மனக்கட்டுப்பாடு தான் முக்கியம். இன்னொருபுறம், நண்பர்கள் / உறவினர்கள் / உடன் பணிபுரிபவர்கள் இவர்களை நேரில் சந்தித்து பேசுங்கள். உரையாடுங்கள். முடியாவிட்டால், அலைபேசியில் அழைத்துப் பேசுங்கள். சமூக பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான விளையாட்டை மைதானத்தில் விளையாடுங்கள். மனித உறவுகளில் கலந்து வாழும்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம்(meaning of life, happiness) , மகிழ்ச்சி என்பதை நீங்கள் பார்க்க முடியும். மொபைல் போனில் காட்டப்படும் பிம்பங்களில் அல்ல. தயவு செய்து , மாய உலகில் இருந்து வெளியே வாருங்கள்.
______________________
P.Lingeswaran,
Asst. Prof.

Comments