1. நிகழ்காலத்தில் வாழுங்கள். கடந்த காலம், எதிர் காலம் பற்றி கவலைப் படாதீர்கள்.
2. இயல்பாக இருங்கள்.
புத்தரின் அடிப்படையான இரண்டு கான்செப்டுகளை வைத்துக்கொண்டு - அதை தம் வசதிக்கேற்ப மற்றும் அறிவுக்கேற்ப உருட்டி, நீட்டி, சுருக்கி - மக்களுக்கு போதித்து வருகிறார்கள் தற்போது வாழும் யோகிகள். ஓஷோ, சத்குரு ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ரவிசங்கர்ஜி மற்றும் இன்னும் பலர் இதில் அடங்குவர். இவர்களின் வாழ்க்கைக்கும், போதனைக்கும் உள்ள முரண்பாட்டை (Discrepancy) நான் இங்கு ஆராய போவதில்லை.
மேற்சொன்ன இரண்டு போதனைகளை கவனியுங்கள். அதனை அப்படியே, இந்த நவீன யுகத்தில் அப்ளை பண்ண முடியுமா? முடியும். அதற்கு, ஓசியில் மூன்று வேளை சோறும், தங்க நல்ல வசதியும் இருந்தால் முடியும். ஆனால் A stupid common man of this republic country ஒருவரால் முடியுமா? அனுதினமும் இன்னல் நிறைந்த சமூக வாழ்கையில் ( Social Life) - Business என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பன்னாட்டு ......ட்டிகளையும், மருத்துவம், கல்வி, அரசியல் என எந்தெந்த வழியுண்டோ அத்தனையிலும் திருடும் ஆசாமிகள் நிறைந்த இவ்வுலகில் புத்தர் சொன்ன வார்த்தைகளை கடைபிடிக்க முடியுமா? அதுவும் முடியும். சிற்சில திருத்தங்களோடு.
அப்படி ஒரு மகத்தான வழியை காட்டியவர்தான் Underrated தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. கடந்த சில நூற்றாண்டுகளில் யோகிகள், ஞானிகளாக அறியப்படுபவர்கள் பெரும்பாலும் இளம்வயதில் வீட்டைவிட்டு ஓடி வந்திருப்பார்கள் அல்லது சிறுவயதிலிருந்தே எல்லாவற்றையும் 'துறந்திருப்பார்கள்'. வேதாத்திரி மகரிஷியோ, இக்கட்டுரையை படிக்கும் நீங்களோ நானோ வாழும் துயரம் நிறைந்த வாழ்கையை வாழ்ந்து அறுபது வயதிற்கு மேல் தான்பெற்ற தவ அனுபவங்களை, யோக வாழ்வை, அனுபவங்களை பயிற்சிகளாக செதுக்கி - பாரபட்சம் இல்லாமல் - பணத்தை எதிர்பார்க்காமல் - மக்களிடம் மேகம் போல் பொழிந்த ஞானவள்ளல். இந்த மகானை குருவாக பெற்றது நான் எந்தப் பிறவியில் செய்த புண்ணியமோ.
வேதாத்திரி மகரிஷி புத்தரின் தத்துவங்கள் மற்றும் தென்னிந்திய சித்தர்களின் தத்துவங்களை விரிவாக ஆராய்ந்து - சீர்தூக்கி பார்த்து - தற்கால கொடுமையான சமூக நிலைக்கேற்ப , அதில் சமாளித்து வாழ்வதற்கு - சிலசில மாற்றங்களை செய்து ' மனவளக்கலை ' என்ற பெயரில் வழங்கினார். அதற்குமுன், சித்தர்களின் தத்துவங்கள் என்பவை: -
1. உடலை நோயில்லாமல் ஓம்புதல்.
2. நீண்ட ஆயுளுடன் இளமையாக வாழ்தல்
3. மனதிற்குள்ளாக இறைவனை உணர்தல்
4. நோயால் அவதிப்படுபவர்களுக்கு வைத்தியம் செய்தல்
5. அவசியப்படும்போது சித்து விளையாட்டுகள் செய்தல்.
இதில் புத்தர் மற்றும் சித்தர்களுக்கு உள்ள வேறுபாடு இறைவன் மட்டுமேயாகும். புத்தர் இறைவனை நிராகரித்தார்.
மனவளக்கலையில் உள்ள பயிற்சிக் கூறுகள்:
1. எளியமுறை உடற்பயிற்சி ( நோயற்ற வாழ்வு வாழ)
2. காயகல்ப பயிற்சி (இளமையாக வாழ, மரணத்தை தள்ளிப் போட )
3. அடிப்படை தவ முறைகள் - ஆக்கினை, துரியம் , சாந்தி ( மன அமைதி)
4. மேல்நிலை தவ முறைகள் - ஏழு மையங்களில் தவம், கண்ணாடி தவம், தீபப் பயிற்சி ( இப்பயிற்சிகளால் ஒருவருக்கு - Telepathy , Clairvoyance , Mind reading, உடலிலிருந்து வெளியே உலாவுதல் போன்ற அமானுஷ்ய சக்திகள் கைகூடும். ஆனால் மகரிஷி எந்த இடத்திலும் இதை ஊக்குவிக்கும்படி பேசவில்லை. மனிதர்கள் இவ்வாற்றலை தவறாக பயன்படுத்தக் கூடும் என அவர் நினைத்திருக்கலாம் )
5. தற்சோதனை ( கவலை, கோபம், தீய ஆசைகளை ஒழித்து மனம் தூய்மை பெற)
6. இறைநிலை உணர்தல்.
ஒருவர் கடந்த காலத்தை பற்றி சிந்திக்கலாம், பேசலாம், எழுதலாம். நிகழ்காலத்தை பற்றி சிந்திக்கலாம், பேசலாம், எழுதலாம். எதிர்காலத்தை பற்றி சிந்திக்கலாம், பேசலாம், எழுதலாம். முக்காலத்தையும் தாண்டி ஒருசிலரால்தான் சிந்திக்க, பேச, எழுத முடியும். அவ்வொரு சிலரில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியும் ஒருவர்.
LINGESWARAN
08/12/2015
P.S: To read my previous articles related to Vethathiri Maharishi, Kindly go through : -
http://lingeswaran-ise.blogspot.in/2015/07/blog-post_22.html
http://lingeswaran-ise.blogspot.in/2012/09/brief-life-history-of-vethathiri.html
http://lingeswaran-ise.blogspot.in/2011/04/blog-post_19.html
Comments
Post a Comment