Vision & Mission Statements - Management Concepts.



மேனேஜ்மென்ட் உலகத்தில் அடிக்கடி தட்டுப்படும் Vision & Mission Statements பற்றி அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒரு கார்பரேட் கம்பெனியின் வெப்சைட்டிலோ, பெரிய கல்வி நிறுவனங்களின் வெப்சைட்டிலோ பார்த்தீர்களானால் அதில் Vision & Mission என்று ஒரு Column இருக்கும். Vision & Mission Statements ஒரு கம்பெனியின் Strategic Planning எனப்படும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடுதலில் ஒரு அங்கமாகும். அடுத்த ஐந்து வருடங்களில் புதிதாக பத்து கிளைகள் துவங்குவது, அடுத்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் சேல்சை இரண்டு மடங்காக எவ்வாறு ஆக்குவது போன்றவை Strategic Decision க்கு உதாரணங்களாகும். Vision & Mission Statements ஒரு நிறுவனத்தின் இலக்குகளை (Goals & Objectives) வரையறுக்கின்றன.


Mission Statement என்பது ஒரு நிறுவனம் ஆதாரமாக எந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை சுருக்கமாக கூறுகிறது. அதாவது என்னவிதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன அல்லது என்னவிதமான சேவைகள் தரப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. மேலும் தங்களது வாடிக்கையாளர்கள் யார்யார், தங்களின் உற்பத்தி/சேவை அளிப்பில் எந்தவித சிறப்பம்சங்கள் உள்ளன, எந்தவித மேனேஜ்மென்ட்/ப்ரொடக்ஷன் உத்திகளை கையாளுகிறோம் என்ற குறிப்புகளும் Mission Statement -ல் தரபட்டிருக்கும். Mission என்பது Specific ஆக இருக்கும்.


Vision Statement , Mission Statement போன்றது அல்ல. Vision Statement எதிர்காலத்தை சார்ந்தது. Vision Statement is of long-term significance. எதிர்காலத்தில் நிறுவனம் இருக்கப்போகும் ஒரு உன்னதமான நிலையை- திருக்குறள் போல- ஒரு சில வரிகளில் கூறக்கூடியது Vision. ஆங்கிலத்தில் இதை Ideal State of the Organization என கூறலாம். Visionil கூறப்பட்டுதை சாதிப்பது மிகக்கடினம் என்றாலும், ஒரு நிறுவனம் அதை நோக்கியே நடைபோட முயற்சி செய்கிறது. தங்களது ஊழியர்களின் செயல்பாடுகள், உற்பத்தி போன்றவற்றை Vision .ஐ நோக்கியே அமைத்துக்கொள்கிறது.
Mission Statement, Specific ஆனது. ஆனால் Vision Statement சற்று பரந்துபட்ட Broader Meaning கொண்டது.


Vision & Mission Statements இரண்டும் வேறுபட்டவை அல்ல. Vision ஐ அடைய Mission உதவுகிறது. Mission ல் சொல்லப்பட்டுள உத்திகளை கண்டறிந்து கையாள Vision உதவுகிறது. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. இரண்டும் ஒரு நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் ஆகியோரை Motivate , Inspire செய்ய உதவுகிறது. ஏனெனில் இவைதான் இலக்குகள்....அவற்றை இப்படித்தான் அடைய வேண்டும் என வழிகாட்டுவதால் வி.மி. Statements ஒரு நிறுவனத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை; பயனளிப்பவை. கம்பெனி முழுக்க ஆங்காங்கே சிறுசிறு போர்டுகளில் இவை பார்வைக்கு படும்படி மாட்டப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்களை கவரவும், நிறுவனத்தை பற்றி மனதில் ஒரு Clear Picture ஐ கொண்டு வரவும் இந்த Statements உதவுகின்றன.


நான் குவாலிட்டி மேனேஜ்மென்ட் என்ற ஒரு பரிட்ஷை எழுதும்போது Vision & Mission Statements தலா ஒரு உதாரணம் எழுதவும் என ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். எனக்கு அப்போது ஒரு நிறுவனமும் நினைவுக்கு வரவில்லை. கடைசியில் நானாக யோசித்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் Vision & Mission என சொந்தமாக எழுதினேன். உலகம் முழுவதும் போர், பஞ்சம், பசி இல்லாது அமைதியை கொண்டு வருவது Vision எனவும்----------போருக்கு பின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது, மருத்துவ சேவைகள் செய்வது, பகை நாடுகளிடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்துவது பூசல்களை சரிசெய்வது போன்றவற்றை Mission ஆகவும் எழுதினேன். என்னுடைய பேப்பரை திருத்தியவருக்கு சமாதானமாகத்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். எழுபது மார்க் போட்டிருந்தார்கள்.

Comments

  1. உலகம் முழுவதும் போர், பஞ்சம், பசி இல்லாது அமைதியை கொண்டு வருவது Vision எனவும்----------போருக்கு பின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது, மருத்துவ சேவைகள் செய்வது, பகை நாடுகளிடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்துவது பூசல்களை சரிசெய்வது போன்றவற்றை Mission ஆகவும் எழுதினேன். என்னுடைய பேப்பரை திருத்தியவருக்கு சமாதானமாகத்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். எழுபது மார்க் போட்டிருந்தார்கள்.


    ..... That is good! Congratulations! :-)

    ReplyDelete

Post a Comment