
உணவு உடை உறைவிடம் இவையே
---- மனிதனுக்கு உண்மையான தேவைகள்.
பணம் பெருக்கும் பேராசையால் முதலாளிகள் பலர்கூடித்
----தேவையற்ற பொருட்கள்பல உற்பத்தி செய்வார்.
மனமயக்கத்திலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கும் மக்கள்
----உழைத்தீட்டும் பணத்தை கொட்டுகின்றார் இதிலே.
குணம்மாறி மக்கள் விழிக்கும்வரை சமூகத்தில்
----கடன் நோய்கள் வறுமை குறையா.
வீணாக இவ்வகையில் மனித ஆற்றல் விரயமாகாமல்
----தடுக்க சிந்தனையை செலுத்துவீர் அறிஞர்களே !
- லிங்கேஸ்வரன்.
மனமயக்கத்திலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கும் மக்கள்
ReplyDelete----உழைத்தீட்டும் பணத்தை கொட்டுகின்றார் இதிலே.
....சமூக அக்கறையுடன், சிந்திக்க வைக்கும் ஒரு கவிதை. பாராட்டுக்கள்!
சரியான கேள்வி... அறிஞர்களே... !!!!
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
Excellent........
ReplyDelete