நாம் நினைப்பது ஏன் நடப்பதில்லை?

 


உரையாடல்களின் போது என் அப்பா அடிக்கடி ஒரு ஆங்கில பழமொழி கூறுவார். 'Man proposes, But God disposes', ' நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் ' என்பது அதன் அர்த்தம் எனவும் கூறுவார். அந்த வயதில் Proposal என்ற வார்த்தைக்கும் எனக்கும் அர்த்தம் தெரியாது, Disposal என்ற வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது. பிறகு, வயதும் அனுபவங்களும் கூடும்போது அப்பழமொழியின் முழு அர்த்தத்தையும் தெளிவாக புரிந்துகொண்டேன். ஆனால், புரிந்துகொள்ளும்போது அப்பா உயிரோடு இல்லை. மனிதர்களின் மனதிற்கு ' சிந்தனை சுதந்திரம் ' உண்டு. நாம் என்ன வேண்டுமானாலும் சிந்தித்துக் கொள்ளலாம், கற்பனை செய்யலாம் , திட்டங்கள் தீட்டலாம். அதில் யாரும் தலையிடுவாரும் இல்லை. தடுப்பாரும் இல்லை. ஆனால், நாம் சிந்தித்ததை போல, கற்பனை செய்தது போல, திட்டமிட்டது போல நடக்குமா என்றால் - இது மில்லியன் டாலர் கேள்வி. திட்டமிடுவது நம் செயல் , அதை முடித்து வைப்பது இறைவனின் செயல் / இயற்கையின் செயல். வாழ்க்கை அனுபவங்களை வைத்துப்பார்க்கையில், நாம் திட்டமிடுவதில் / கற்பனை செய்வதில் 90% கூட நடப்பதில்லை. சிந்திக்கும் திறனை மனிதர்களாகிய நாம் Misuse பண்ணுகிறோமோ என்றுகூட தோன்றுகிறது. என்ன வேண்டுமானாலும் சிந்திப்பது நம் உரிமை. ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணம் செயலாக, நடைமுறை வாழ்க்கையில் ஏகப்பட்ட Factors இணைந்து ஒத்துவந்தால் மட்டுமே, அவ்வெண்ணம் (Materialization of thoughts) நிகழ்ந்து முடியும். நடைமுறை வாழ்வில் நடக்கக்கூடிய காரியங்களை மட்டும் , கணித்து சிந்தித்து திட்டமிட கூடிய ஆற்றல் நமக்கு உள்ளதா? மனதிற்குள் , யோசித்து யோசித்து மூளை களைத்துப்போகும் (Mental fatigue) நிலைதான் பெரும்பாலும் உள்ளது. எனவே, ஒவ்வொருவரும், சிந்தனையை கவனித்து கவனித்து, அதன் இஷ்டம் போல் உலவ விடாமல் கட்டுப்படுத்தவும் , சீரமைக்கவும் பழகிக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து .
___________________________
P.Lingeswaran
Asst. Prof.
22.04.21

Comments