நோய்கள் வரக் காரணங்கள் - இயற்கை மருத்துவம்!



நோயாளிகள் நிறைந்த ஒரு சமூகத்தை, செயற்கையாக, உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. உங்கள் உடல் நலத்திற்கும், மன நலத்துக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் (self responsibility) கொள்ளாவிட்டால் இது நடந்துவிடும். இயற்கை சக்தியின் போக்கிலேயே, நம்முடைய சிந்தனை முறையும், பழக்கவழக்கங்களும் அமைந்துவிட்டால் நோய்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. இயற்கை எனும் பேராற்றலை, நம் உடலிலும், மனதிலும் செயல்பட அனுமதித்து நோய்களை தீர்க்கும் முறை ஒன்று உண்டு, அதன் பெயர் இயற்கை மருத்துவம் . இயற்கை வைத்தியம் தொடர்பாக பல ஆங்கில நூல்கள், தமிழ் நூல்கள், எனது சொந்த அநுபவங்கள் மூலம் நோய்கள் வரக்காரணம் மற்றும் அவற்றை தீர்க்கும் வழிகள் குறித்து ஆராய்ந்த எனக்கு, சில உண்மைகள் கிடைத்தன. ஆச்சரியம் என்னவெனில், இயற்கை விதிகள் மிக எளியவை. எந்த நோயையும் ,அதற்குரிய நேரம் கொடுத்தால், குணமாக்க கூடியவை. நோய்கள் ( விபத்துகள், அசம்பாவிதங்கள் தவிர்த்து ) உருவாக மிக முக்கிய காரணமாக நான் கண்டறிந்தவை: -

1 . அளவுக்கு அதிகமாக உணவு உண்பது
2 . உடலில் உருவாகும் கழிவுகள் வெளியேறவும் , உண்ட உணவு செரிக்கவும் - போதுமான உடல் உழைப்பு இல்லாமை
3 . சரியாக மலம் கழியாமை

இயற்கை வைத்தியம் என்ற தலைப்பில் நம்மவர்களை விட ஆங்கிலேயர்கள், ஐரோப்பியர்கள் மிக நுணுக்கமாகவும், விரிவாகவும் பல நூல்கள் எழுதியுள்ளார்கள் என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. உதாரணமாக Professor Arnold Ehret எழுதிய Mucuousless Diet System of Healing என்ற நூல்.
--------------

P. Lingeswaran
Asst. Prof.
11.04.2021
 

Comments