YouTube-ல் இளையராஜாவின் பாடல் ஒன்றிற்காக, கமெண்டில் யாரோ ஒருவர் ' இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் கண்ணீர் வருகிறது ' என எழுதியிருந்தார். முற்காலத்தில் இசை மூலம் மழை பொழிய வைத்தார்கள் என்று புத்தகம் ஒன்றில் படித்தேன். அது உண்மையா என தெரியவில்லை. ஆனால் , இனிமையான இசையை கேட்கும்போது, மனநிலை (psychological well-being) சீராகிறது என்றே தோன்றுகிறது. அடிப்படையில், மனித உடல் பஞ்ச பூதங்களால் ( நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) ஆனது. அறிவியல் இவற்றை Gas, Solid, Liquid என்கிறது. Semi Solid (கூழ் ) என்றுகூட ஒருவகை உண்டு. ஒவ்வொரு பாடலும் / இசையும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் , அலைநீளத்தில் (frequency and wavelenght) ஒலிக்கிறது. நாம் ஒரு பாடலை கேட்கையில் நம்முடைய உணர்வும் ( raise in sensation ) அதே அதிர்வெண் மற்றும் அலைநீளத்திற்கு உயருகிறது / மாறுகிறது. இம்மாற்றத்திற்கேற்ப , பஞ்ச பூதங்களின் உடலில் அமைந்துள்ள விகிதாச்சாரத்தில் (ratio) மாற்றம் பெறுகிறது. நல்ல, இனிய , அர்த்தமுள்ள இசையை காதுறும்போது - மனித உடலில் சீர்குலைந்துள்ள அல்லது குறைவுபட்ட பஞ்ச பூதங்கள் சீரடைகிறது. தொடர்ச்சியாக, நாம் கேட்கும் பாடலை பொறுத்து , நம் மனநிலை மகிழ்ச்சியோ, உற்சாகமோ , அமைதியோ அடைகிறது. வெளிநாடுகளிலும் , இந்தியாவில் பெருநகரங்களிலும் கூட Music Therapy என ஒரு சிகிச்சை உண்டென நினைக்கிறேன்.
P.LINGESWARAN
Asst.Prof / MBA
Comments
Post a Comment