குழந்தைகளை திட்டாதீர்கள்... !

 




Eric Berne, Sigmund Freud , Carl Jung ,Carl Rogers போன்ற உளவியல் நிபுணர்கள் முதல் , தற்போதைய Dr. Bruce Lipton வரை ஒவ்வொருவரும் ஒரு School Of Thought -ஐ உருவாக்கி இருந்தாலும் - இவர்கள் அனைவரும் ஒரே ஒரு முக்கிய கருத்தில் உடன்படுகிறார்கள்.  அது,  குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் (Personality development)  பெருமளவு ( More or Less 90%) அவர்களுடைய முதல் எட்டு வயதிற்குள் உருவாகிவிடுகிறது என்பதே.  எட்டு வயதிற்குள் உருவாகிவிட்ட ஆளுமைத்திறனை மூலதனமாக வைத்துக்கொண்டே - எதிர்காலங்களில் அக்குழந்தை தன் வாழ்க்கையை எப்படி வழிநடத்திச்செல்வது ,வெற்றி தோல்விகளை எப்படி எதிர்கொள்வது , சக மனிதர்களுடன் உறவு இவையனைத்தையும் கையாள பழகிக்கொள்கிறது  குழந்தைகளின் அக உலகம் என்பதே வேறு.  அது ஒரு தூய்மையான ஏட்டைப் போன்றது. குற்றவாளிகள் என  நாம் இப்போது  முத்திரை குத்தும்  அனைவரும் ஒருகாலத்தில் ஒன்றுமறியாத குழந்தைகளாக இருந்தவர்கள்  என நினைவில் கொள்ள வேண்டும். பெற்றோர்களாக , ஆசிரியர்களாக குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டியதெல்லாம் - அன்பு ,அரவணைப்பு , பரிவு ,பாதுகாப்புணர்வு , வழிகாட்டல் போன்றவை மட்டுமே.  குழந்தைகளை ஒழுக்கமுடன் வளர்க்க, ஓரளவு கண்டிப்பு , கடுமை தேவை என்றாலும் அவையும் நம் அன்பின்பாற் பட்டதே. குழந்தைகளை தொடர்ச்சியாக திட்டுதல் (blaming) , விமர்சித்தல் (criticzing) , குறைகூறிக்கொண்டே இருத்தல் (hurting),  பிற குழந்தைகளுடன் ஒப்பிடுதல் (comparison) போன்ற செயல்கள் அவர்கள் அக உலகத்தை சிதைத்து , குறைவுப்பட்ட ஆளுமை (distorted / negative self-image)  உருவாக காரணமாகிவிடும்.  Dr.அப்துல் கலாம் ஒரு நூலில், குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக அமைவது  , தாய் -தந்தை -ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  இதை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்துகொள்ள விரும்பி,  பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஆளுமைகளின் வரலாறுகளை ஆழ்ந்து படித்துப்பார்த்தேன்.  அவர்களில் ஒரு சிலர்:-  காமராஜர்  , அப்துல் காலம்,  வேதாத்திரி மகரிஷி எழுத்தாளர் சுஜாதா  , எழுத்தாளர் ராஜேஷ் குமார்  . ஒரு குழந்தையின் தலையெழுத்து அதன் 10 வயதிற்குள் நிச்சயமாக எழுதப்பட்டு விடுகிறது என்பது உண்மைதான் . அதை எழுதுபவர்கள் வேறு யாருமல்ல, அக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே.  ஆகவே குழந்தைகளை திட்டாதீர்கள், விமர்சிக்காதீர்கள் ,ஒப்பிடாதீர்கள் ,தீர்ப்பிடாதீர்கள்


P.Lineswaran
Asst.Prof.
06.02.2021

Comments