நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

 



வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. குறிக்கோளே இல்லாமலும் சிலர் உண்டு. பணம் நிறைய சம்பாதிப்பது, பிடித்த வேலையை பெறுவது , மனங்கவர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வது போன்றவை பொதுவான குறிக்கோள்களில் சில. எந்த குறிக்கோளாக இருந்தாலும் அதனுடைய கடைசி குறிக்கோள்  'மகிழ்ச்சியே'  ஆகும். மகிழ்ச்சியாக இருப்பதற்காக / மகிழ்ச்சியை சென்றைடைய ஒவ்வொருவரின் வழிகள் தாம் வேறுவேறே அன்றி, Destination ஒன்றுதான். மகிழ்ச்சியை அனுபவித்த பிறகுதான் ஒருவர்  'அமைதி'  நிலையை அடைய முடியும்.  Sigmund Freud எனும் உளவியல் அறிஞர் என்ன கூறுகிறார் என்றால், மனித இனமே ' துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பத்தை அடைய தொடர்ந்து முயலும் ' உயிரினம் என்கிறார்.   ஹீலர் பாஸ்கர் ஒரு வீடியோவில் புற்றுநோய் வருவதற்கான காரணமாக ,  மனதிற்கு பிடிக்காத வாழ்க்கையை ஒருவர் தொடர்ந்து வாழும்போது - என ஒரு காரணமாக கூறுகிறார். இதை அப்படியே மாற்றிப்போட்டால் -  மனதிற்கு பிடிக்காத வாழ்க்கை என்பது  ' மகிழ்ச்சியின்மை ' என்பதையே குறிக்கிறது. இன்னும் கொஞ்சம் மாற்றிப்போட்டால்  ' மகிழ்ச்சியாக இருப்பது ' பலநோய்கள் வராமல் தடுக்கும் என்றும் , வந்தாலும் நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என்று தெரிகிறது. மகிழ்ச்சியாக இருக்கும்போது உடம்பில் Serotonin, Dopamine, Melatonin, Oxytocin ஆகிய அத்தனை ஹார்மோன்களும் சுரக்கும் என நினைக்கிறேன். ஒரு ஆணும் பெண்ணும் காதல் வயப்படும்போது அவர்களின் முகங்கள் பிரகாசமாக இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் , நீங்கள் என்ன கெட்ட வார்த்தையில் திட்டினாலும் அவர்கள் காதில் விழுகாது. 


P.Lingeswaran (Asst. Prof)

Positive Psychologist

Comments