ஒரு மாறுதலுக்காக, மெகா சீரியல்களை பற்றி , நேர்மறையாக சிந்தித்து பார்க்கலாம். முதலில் வேலைவாய்ப்பு. மெகா சீரியல்களில் வரும் நடிகைகளுக்கு அரை இன்ச் அளவுக்கு பெயிண்ட் அடிக்கும் மேக் அப் மேன்கள், இளையராஜா அல்லது A. R. ரஹ்மான் பாடலில் ஒன்றை உருவி (கொஞ்சம் மாற்றி) , அதை இசைக்கும் இசையமைப்பாளர்கள் , ' அ.....அ....அ....அ...ஆ.....ஆ....ஆ....அ..அ....' என கீழிலிருந்து மேலேறி இறங்கும் பாடகிகள், மூக்கு வழியாக டப்பிங் பேசும் ஆர்டிஸ்டுகள் - இவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது மற்றும் வழக்கமான இத்யாதிகளான தினச் சம்பளம் , மூன்று வேளை சாப்பாடு, டீ காப்பி வடை போண்டா போன்றவை தனி. மேலும் திருத்தமான முக அமைப்போடு ரம்யமாக தோன்றும் நடிகையை பார்த்து, இளைஞர்களுக்கு எதிர்காலத்தின் மேல் நம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கலாம். லிப்ஸ்டிக் போட்டு நடிக்கும் இளம் நடிகரைப்பார்த்து நம் பெண்கள் கனவு காணலாம் . நல்ல ஹார்மோன்கள் உடம்பில் சுரக்கும்.
Comments
Post a Comment