" ஏமாற்ற உணர்வுகள் தணிந்து , ஒருவர் சரியான கண்ணோட்டத்தை பெறும்போது, அந்த ஏமாற்ற உணர்வுகள் நமது அடிப்படையான சிந்தனை முறையை மாற்றும் சக்தியை பெற்றுள்ளன என இப்போது நான் அறிந்து கொண்டுள்ளேன் " .
- எனது பயணம் என்ற நூலிலிருந்து ,
Dr. A P J Abdul Kalam.
மேற்கண்ட வாக்கியங்கள் மிகவும் என்னைக் கவர்ந்தவை. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் , முன்னோக்கி வெற்றிகரமாக செல்லும்போதும் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒருவர் ஏமாற்றங்கள் , தோல்விகள் , விரக்தி , உடல்நலக்குறைவு போன்றவற்றை எதிர்கொள்ளும்போது அவர் அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கேள்வி. அதாவது தோல்விகளை , அவமானங்களை எப்படி நாம் எப்படி பார்க்கிறோம் , எப்படி எடுத்துக்கொள்கிறோம் (கண்ணோட்டம்/ Perception) என்பதை பொறுத்தே நம் மன நலமும் , உடல் நலமும் அமைகிறது. " வாழ்க்கையில் பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் அதனை தொடர்ந்து மன அழுத்தம் போன்றவை தவிர்க்க முடியாதவை . அவற்றை தாங்கிக்கொண்டு கடந்தே வரவேண்டும். பிறகு நம்மை நிதானப்படுத்திக்கொண்டு, ஆசுவாசமாக யோசித்துப்பார்க்கையில் - நம்மையும் அறியாமல் நாம் வழக்கமாக சிந்திக்கும் முறை(usual thinking method) , செயல்பாடுகள் (actions) , மனிதர்கள் மற்றும் பிரச்சினைகள் உடன் நம்முடைய அணுகுமுறை (approach with people and problems) இவையனைத்தும் மாற்றி அமைக்கப்படுகின்றன " - என்று Dr.கலாம் தன்னுடைய நீண்ட நெடிய அனுபவங்கள் வாயிலாக அறிவுறுத்த முற்படுகிறார்.
P. LINGESWARAN
15.01.2021
Comments
Post a Comment