சந்தோசமாக மக்கள் வாழும் நாடுகள் எவையெவை என UNO எடுத்த (2019) சர்வேயில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் , நார்வே போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்தியா அனேகமாக கடைசி இடங்களிலும், பாகிஸ்தான் அதற்கு முன்பு இடத்திலும் இருப்பது நாம் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.
Csikszentmihalyi, Maxwell Maltz போன்ற பல ' மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர்கள் ' கூறுவது என்னவென்றால் ' Happiness is purely internal ' . ஆனால் நம் நாட்டை அரசாள்பவர்கள், மக்களை வதக்குவதை பார்க்கும்போது ' வாழும் நாடு ' கூட மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியோ ( Factor) என தோன்றுகிறது . ஒவ்வொரு குடிமகன் கைகளிலும் ' ஆதார் கார்டு, பான் கார்டு ,ஸ்மார்ட் கார்டு, முக மூடி ( கொரோனா ) , லைசென்ஸ், இன்சூரன்ஸ் , கால் கிலோ மொபைல் போன், பாங்க் பாஸ்புக் மற்றும் தினமும் அதிலிருந்து பாங்குக்கு 1 ரூபாய், இவையெல்லாம் பார்க்கும்போது - ஒஷோ கூறுவது போல ' நீங்கள் வாழும் வாழ்க்கை போலித்தனமானது '.
P.LINGESWARAN
Asst Prof / Yoga Practitioner.
Comments
Post a Comment