1 நெல் = 1 நெல் செடி
1 நெல் செடி = 7 கதிர்கள்
1 கதிரில் = 100 நெல் மணிகள்
7 கதிர்கள் = 700 நெல் மணிகள்
So,
1 நெல்லிலிருந்து 700 நெல் கிடைக்கிறது. 1 கிலோ நெல் போட்டால் 700 கிலோ நெல் கிடைக்கும். என்ன அற்புதம்? இயற்கை எவ்வளவு தாராளமானது எனவேதான் இறைவனை அட்சயம், பூரணம், வற்றாயிருப்பு, Abundance, Providence என பல பெயர்களால் அழைக்கிறோம். இந்த இயற்கை நியதி அப்படியே மனிதர்களின் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் பொருந்தும். பொறுமை, விடாமுயற்சி , நல்ல எண்ணங்கள் ஆகியவை நிச்சயமாக அதற்குரிய காலத்தை எடுத்துக்கொண்டு மிக அதிக பலன்களை தரும். ஆகையால்தான், நாம் பிறர்க்கு , பிரதிபலன் பாராமல் செய்யும் உதவி (பணம், நல்ல சொல், ஆறுதல் அல்லது ஏதோ ஒருவகையிலான உதவி ) , மீண்டும் நமக்கே பலமடங்காக திரும்பி வரும். இடையில் பார்த்தால் ஒன்றுமே நடக்காததுபோல தோன்றுகிறது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கியுள்ள ' இரண்டொழுக்க பண்பாட்டை ' பாருங்கள்:-
1. நான் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தர மாட்டேன்.
2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். மகரிஷி இயற்கையை \ இறைவனை குறிக்க ' அருட்பேராற்றல் ' என்ற சொல்லை பயன்படுத்துவதை கவனிக்கவும் . அருள் + மாபெரும் + ஆற்றல்.
Reference: The Law of Success, Napoleon Hill & An Essay by Dr. Kanaga sabapathy MBBS., MD from Health Time (Tamil Magazine)
_________________________________________________________________
Writing
P.Lingeswaran
Asst.Prof / MBA
Comments
Post a Comment