பொழுதுபோகாமல் Facebook -ஐ உருட்டிக் கொண்டிருக்கும்போது , கவிஞர் வாலி அவர்களின் பேட்டி ஒன்றை காண நேர்ந்தது. பேட்டி எடுப்பவர் வாலியிடம் இதுவரை நீங்கள் எழுதிய பாடல்களிலேயே உங்களுக்கு பிடித்த வரி என்ன என கேட்டபோது அவர் இந்த வரிகளை கூறினார்:-
' ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும் '
பாடல்: உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் \ திரைப்படம்: அபூர்வ சகோதர்கள்
வாலி அவர்களின் வயதிற்கு அனுபவத்திற்கு , இப்பதில் எனக்கு மிக ஆச்சரியமாக இருந்ததது. இதேபோல் சில மறக்க முடியாத பாடல்களையும் , அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். எப்படி ஒருவரால் - எத்தனையோ விதமான சூழ்நிலைகளுக்கு , உணர்வுகளுக்கு பாடல்கள் எழுத முடிகிறது? கவிதைக்கான இலக்கணம் \ வரையறை என William Wordsworth கூறியது நினைவுக்கு வருகிறது:-
' Poem is a spontaneous overflow of intense feelings '
நான் என்ன நினைக்கிறேன் என்றால், நல்ல கவிதை ஒன்றை யாரும் முயன்று எழுத முடியாது. கவிஞர் அக்குறிப்பிட்ட மனநிலையில் மூழ்கும்போது - அவரது மன அலைச்சுழல் (Mental Frequency) - குறைந்து குறிப்பிட்ட சூழ்நிலைக்கு பொருந்தி போகும்போது - யாரோ எழுதிய வார்த்தைகள் யாரோ பேசிய சொற்கள் யாரோ எழுதிய வாக்கியங்கள் இங்கு வந்து கவிஞரின் உள்ளம் மூலமாக வெளிப்படுகின்றன. சுஜாதா அவர்கள் அடிக்கடி கூறுவார், ஒரு கட்டுரை \ கவிதை ஒன்றை எழுதி முடித்தபின் - அது தான் எழுதியது போலல்லாமல் இருக்கிறது என்றும், கதையே தன் மூலமாக எழுதிச் செல்கிறது என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். சிந்தனையில் ஆழ்ந்து, ஒரு அனுபவத்தில் உணர்வில் நினைவில் மூழ்கும்போது , நம் மனதே அந்த நுணுக்கமான உணர்வை கவிதைகளாக \ கதையாக வடித்துக்கொள்கிறது என்றே தோன்றுகிறது. உதாரணமாக , பின்வரும் சிறு கவிதை ஒன்றை பாருங்கள். நான் REC , Trichy -ல் பொறியியல் படிக்கும்போது எனது நண்பர் மாரியப்பன் எழுதிய கவிதை அது. 2001 அல்லது 2002 -ம் ஆண்டுகளில் ஆனந்த விகடனில் வெளிவந்து பரிசு பெற்ற கவிதை. 21 வயதில் மாரியப்பன் எழுதிய கவிதை :-
தலைப்பு: டைவர்ஸ்
உன்னை நானும்
என்னை நீயும்
முழுமையாக
புரிந்து கொண்ட போது .
___________________________________________________________________________Writing
P.Lingeswaran
Asst.Prof / MBA
Comments
Post a Comment