ஆதிவாசிகளாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுக்கு நோய் என்பதே இருந்திருக்காது. நாகரீகம் வளர வளர, மக்கள் ஒரு சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் வரையறைகள் (Social norms) இவைகளோடு கூடிய சமூகமாக வாழத்துவங்கிய போதுதான் நோய்கள் துளிர்விடத் துவங்கியிருக்கும். நாகரீக வாழ்விற்கு ( modern civilization ) மனிதன் கொடுக்கும் விலைதான் இன்றைய மனநோய்கள் என்கிறார் உளவியல் மேதை Sigmund Freud . உடல் நோய்களும் அவ்வாறே என சொல்லத் தேவையில்லை. அறிவியல் வளர வளர நோய்களும் பெருகுகின்றன, மருந்துகளும் பெருகுகின்றன, மருத்துவக் கருவிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன.மருத்துவத் துறையில், சரியான திசையில்தான் செல்கிறோமா? உதாரணமாக, Dexamethasone என்ற மருந்து நவீன மருத்துவத்தில் , தோல் அலர்ஜி, ஒவ்வாமை மற்றும் பல வியாதிகளை கட்டுப்படுத்த தரப்படுகிறது. இம்மருந்து என்ன செய்கிறது என்றால்- மனித நோயெதிர்ப்பு சக்தியின் (Immune system ) செயல்பாட்டை , உடம்பின் இயல்பான (Body's natural defensive response) எதிர்வினையாற்றும் திறனை மட்டுப்படுத்துகிறது.
என் மனதில் வசிக்கும் ஒரு நாட்டு மருத்துவர் என்ன கூறுகிறார் எனில், நம் வீட்டில் இருக்கும் மளிகை சரக்குகளை பயன்படுத்தியே பெரும்பாலான நோய்களை தீர்த்து விடலாம் என்கிறார். அச்சரக்குகள்:-
" மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், இலவங்கம், மல்லி, பெருங்காயம், கடுகு, ஏலக்காய், விளக்கெண்ணெய் , கறிவேப்பிலை, கொத்தமல்லி, எலுமிச்சை, தேன் , இஞ்சி , சுக்கு, இந்துப்பு , கிராம்பு மற்றும் சில சரக்குகள் "
பிறகென்ன? என்றால் அவர், நோய்களை குணமாக்க இது மட்டும் போதாது - தான் மேலும் சில முக்கிய அம்சங்களை நோய் வாய்பட்டவரிடம் இருந்து எதிர்பார்ப்பதாக கூறுகிறார். அவைகள்:-
" நோயாளியின் ஒத்துழைப்பு, பொறுமை, நம்பிக்கை , மன தைரியம் "
Writing
P.Lingeswaran
Professor / MBA
Comments
Post a Comment