அன்புள்ள அன்னையே..
_______________________________________


அன்புள்ள அன்னையே..
எப் பிறப்பில்
காண்பேன் இனி..
என் மகனின் முகத்தில்
நீ தெரிகிறாயா என்று
தேடுகிறேன்..
என் மகளின் முகத்தில்
நீ தெரிகிறாயா
என்று தேடுகிறேன்..
என் சகோதரனின் முகத்தில்
நீ தெரிகிறாயா என்று
தேடுகிறேன்..
தலை நரைத்த
கிழவிகளை பார்க்கும்போது
ஒரு கணம் நின்று
பார்க்கிறேன்..
தான் இறந்தால்
தன் மகன் இவ்வளவு
வருத்தப்படுவானோ
என முன்பே தெரிந்திருந்தால்
நீ மரித்திருக்க
மாட்டாயோ...!
எப் பிறப்பில்
காண்பேன் இனி
என் அன்னையே !


- ப.லிங்கேஸ்வரன்.

Comments