2019-வருஷமாகிய இவ்வருடத்தில் மக்களில் பெரும்பாலோர் டாக்டர்களிடம் சென்று பலவித மருந்துகள் வாங்கி உட்கொண்டால் தேக ஆரோக்கியம் கிட்டுமென நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு வைத்தியர் ஒருநாளில் 100 கேஸ்களோ (CASE) அல்லது 1000 கேஸ்களோ பார்ப்பதாக வைத்துக் கொண்டால் அதில் நீங்கள் 53-ஆவது கேஸ் அல்லது 991-ஆவது கேஸ் என்பதே உண்மை ஆகும். இதில் உங்களை முழுவதுமாக சுகமாகி பார்ப்பதுதான் வைத்தியரின் வேலையா? அதிலும் நீங்கள் பல்வேறு நோய்களுக்குரிய Specialist-களிடம் சென்று எனக்கு அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று திரும்பி திரும்பி சொல்லிக் கொண்டிருந்தால் - வைத்தியர் தான் மேற்படிப்பில் கற்ற வித்தைகள் உண்மையில் சரிதானா, வேலை செய்கிறதா என்று உங்களிடம் பரீட்சித்து (Experiment ) பார்க்க ஆரம்பித்து விடுவார். அதுவும் இக்காலத்தில், அனேகமாக எல்லா டாக்டர்களும், தங்கள் திறமை தங்களுக்கே மேல் நம்பிக்கை குறைவாக இருப்பதால் - அவர்கள் பணம் படைத்த தனவான்களிடம் கையை கட்டிக்கொண்டு ஊழியர்களாக வேலை செய்வதால் - தாங்கள் பணிபுரியும் பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளின் ஷேம லாபங்களை கருத்தில் கொண்டு எக்கச்சக்க மாத்திரைகளையும், டெஸ்டுகளையும் எழுதித் தள்ளிவிடுகிறார்கள்.
ஆகையால், உண்மையாக உடல்நலம் பெற வேண்டுவோர்:-
1. நல்ல சுத்தமான காற்றை உள்ளிழுத்து பழகியும்
2. தினமும் மைதானங்களை சுற்றி வியர்க்க மெல்லோட்டம் ஓடியோ/ நடைபழகியோ
3. நன்றாக பசித்துப் புசித்தும்
4. எப்போதும் வயிறு புடைக்க உண்ணாமல் சற்று குறைத்தே உண்டும்
5. ஜீரண கருவிகளுக்கு ஓய்வு தரும் நிமித்தம் வாரம் ஒருமுறை உண்ணாவிரதம் இருந்தும்
6. உடலுக்கு லேசான யோக அப்பியாசங்கள் செய்தும்
7. எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து கவலைபட்டுக் கொண்டே இராமல் - அவ்வப்போது கோயிலுக்கு சென்று தனிமையில் அமர்ந்து மூளைக்கு ஒய்வு கொடுத்ததும்
8. வாழ்க்கையில் முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தும்
9. சுகபோக கருவிகளில் ( டெக்னாலஜி) அதிகம் மனதை மூழ்கடித்துக் கொண்டு பாழடித்து இராமல்

மேலும், அனுபவப்பட்ட பெரிவர்களின் சொல் கேட்டு அதன்படி நடந்தீர்களானால் - தேக ஆரோக்கியம் கண்டிப்பாக சித்தியாகும்.
P.LINGESWARAN,
ASSISTANT PROFESSOR
ASSISTANT PROFESSOR
_______________________________
Comments
Post a Comment