நீங்கள் எதற்காக பிறந்துள்ளீர்கள் என்றால்....!






நீங்கள் எதற்காக 
பிறந்துள்ளீர்கள் என்றால் 
மகிழ்ச்சியாக வாழும் 
வழிகளை கண்டுபிடிப்பதற்காக....



நீங்கள் எதற்காக
பிறந்துள்ளீர்கள் என்றால்  
காதலெனும் சாபத்தை 
ஒரு தேவதையிடம் இருந்து 

பெறுவதற்காக.... 

நீங்கள் எதற்காக
பிறந்துள்ளீர்கள் என்றால்
பிறர் செய்யும் கொடுமைகளை
மன்னிப்பதற்காக....

நீங்கள் எதற்காக
பிறந்துள்ளீர்கள் என்றால்
பிறவிப் பெருங்கடலை
நீந்துவதற்காக....

நீங்கள் எதற்காக
பிறந்துள்ளீர்கள் என்றால்
உங்களைச் சுற்றி நடக்கும்
அக்கிரமங்களை சகித்துக்
கொள்வதற்காக....

நீங்கள் எதற்காக
பிறந்துள்ளீர்கள் என்றால்
ஞானமடைவதற்காக....

நீங்கள் எதற்காக
பிறந்துள்ளீர்கள் என்றால்
உங்கள் திறமைகளையும்,
தன்னம்பிக்கையையும்
வளர்த்துக் கொள்வதற்காக ....

சுற்றி வளைக்காமல்
நேரடியாக கூற வேண்டுமானால்,
நீங்கள் எதற்காக
பிறந்துள்ளீர்கள் என்றால்
ஒரு முடிவை நோக்கி
பயணம் செய்வதற்காக....!  

___

P.LINGESWARAN
Assistant Professor

____

Comments