கதைகள், சிறுகதைகள், நாவல்கள் படிப்பதை ரொம்ப வருடங்கள் முன்பே நிறுத்திவிட்டேன். வாழ்க்கையின் அன்றாட உபாதைகளை சமாளிக்கவும், அவற்றிலிருந்து மீண்டு வரவும் வேறு மாதிரியான (இயற்கை மருத்துவம், உளவியல், சுய முன்னேற்ற, தத்துவ ) புத்தகங்களை படிக்க வேண்டியிருந்தது.
விதிவிலக்காக அல்லது ஒரு மாறுதலுக்காக, சுஜாதா மற்றும் ஜெயகாந்தன் இருவரின் கதைகளை படிக்கிறேன். கைகளில் லென்ஸுடன் வெறிகொண்டு அலையும் Critics-களிடமிருந்து பெரும்பாலும் இவர்கள் தப்பித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். ஜெயகாந்தனின் எழுத்துக்களை உங்களால் விமர்சிக்க முடியாது. ஏனென்றால் ஜெயகாந்தன் உங்கள் ஆழ்மனத்தோடு (அந்தரங்கம் புனிதமானது/சிறுகதை) பேசுவார். சுஜாதா எழுத்துக்கள் அப்படி அல்ல. சுஜாதாவின் நாவல்களில் ஒரு வரியைப்பற்றி யோசிக்கும்போதே, அடுத்த வரியில் தூக்கி அடித்துவிடுவார்.
சமீபமாக, சுஜாதாவின் ' கனவுத் தொழிற்சாலை' படித்துக்கொண்டு இருக்கிறேன். சுஜாதாவின் கூர்மையான Observation ஸ்கில், சம்பவங்களை கலந்தடித்து லேசான நக்கலுடன் (wit) ஆர்வமாக விவரிக்கும் திறனுக்கு இந்நூல் ஓர் உதாரணம். சில வர்ணனைகள் அசரடிக்கின்றன ( " திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா?.....இல்ல, வேலியம் ஒன்னும் பண்ணாது/ குட்டை, நெட்டை,மெலிசு, அபரிதமாக பருத்தவர்கள், ஒல்லிப்பிச்சான்கள் " ). நாவலில் விம்மிய மார்புகள் என்ற வார்த்தை 113 முறை வருகிறது. (ஏக்கம் ?). சினிமாவை சுற்றியே கதை சுழல்வதால் ஆங்காங்கே எல்லை மீறுகிறார் ( ஹீரோ: I like all Ball Games ). திருச்சி, ஸ்ரீரங்கம், கொள்ளிட கரைகளில் இளவயது சுஜாதா தென்படுகிறார். ஹீரோ அருணின் உரையாடல்களில் சுஜாதாவின் Intelligence, பன்முக அறிவு, ஆங்கில/அறிவியல்/தமிழ்ப் புத்தங்கள் கசிகின்றன.
சுஜாதாவைப் போல இன்னொரு எழுத்தாளரை தேடிக்கொண்டு இருக்கிறேன். ஐ மிஸ் சுஜாதா !
LINGESWARAN
Assistant Professor / MBA
Comments
Post a Comment