உலகை ஆளும் வர்க்கம் !




நண்பர்களே !    உலக மக்களின் நிலை அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் கூடிய விரைவில், புறங்கையை நக்கிக்கொண்டே அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் என்றே நினைக்கிறேன். உலகை ஆளும் வர்க்கமானது பல்வேறு குழுக்களாக பிரிந்து உலக நாடுகள் அனைத்திலும் வியாபாரம், அரசியல் , சினிமா, விளையாட்டு, ஊடகம், கல்வி , மருத்துவம்  போன்ற அனைத்து துறைகள் மூலமும் மக்களிடையே ஊடுருவி ஓர் ஒழுங்கமைப்பை (New World Order ) உருவாக்க முயல்கிறார்கள். இது நல்லதுதானே என் சிலர் நினைக்கலாம். அது அவ்வாறல்ல.  மக்களை பலகீனப்படுத்தி  நோயாளிகளாக்கி, சிந்தனை திறனை கேள்வி கேட்கும் திறனை மழுங்கடித்து , குழந்தைகளை மொன்னையாக்கி - சுருங்கச் சொன்னால் மக்களை நடைபிணமாக்கி உருவாக்கப்படப் போகும் உலகம் அது.


500 வருடங்களில் எப்படிப்பட்ட உலகத்தை, உலகை ஆளும் வர்க்கம் உருவாக்கப்போகிறது என்பதை மிகத்தெளிவாக என்னால் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது. அவர்களின் தலையாய முதன்மையான பலியாடுகள்-  நம் குழந்தைச்செல்வங்கள் தான். இதே நிலை தொடர்ந்தால் , நம் குழந்தைகள் வரப்போகும் காலங்களில் சுயமாக சிந்திக்கத்தெரியாத ரோபோட்டுகளாக நடமாடப்போகிறார்கள் என்பதே என் கருத்து. 


எனவே, எதிர்காலத்தில் ஒரு நல்ல அமைதியான சமுதாயத்தை உலகை விரும்பும் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது குழந்தைவளர்ப்பு முறையில் தான். மிக அவசரம் இது.  தயவு செய்து  புரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான கணவன்-மனைவியர் என்ன நினைக்கிறார்கள் என்றால், குழந்தைகள் கண், காது, மூக்கு, கை கால் இவற்றுடன் பிறந்துவிட்டாலே  அவை நல்ல உடலும், மனமும் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள். இதைவிட அபாயம் என்னவெனில், குழந்தைகள் தாமாகவே நல்லமுறையில் வளர்ந்துவிடும் என நினைப்பதே. ஒரு குழந்தையானது எந்த ஒரு நொடியிலும் பெற்றோரின் நடத்தை, ஆசிரியர்கள், சமூகத்தகவல்கள் ஆகிவற்றால் - நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.  ஆனால், 90%  குழந்தைகள் எதிர்மறையான குணங்களை உள்வாங்கிக்கொண்டே வளர்கின்றன. உதாரணமாக, பெரும்பாலான மழலைகள் சிறுவயதிலிருந்தே பாலுறவைப்பற்றி  தவறான அபிப்ராயத்தை மனதில் பதித்துக்கொண்டே வளர்கின்றன. 



நாம் என்ன செய்ய வேண்டும்?


ஒவ்வொரு குழந்தையும் உடல் உரத்துடன், மனோசக்தியுடனும் இளம்பிராயத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பில் - அவர்களிடம் கீழ்காணும் குணாதிசயங்கள் விதைக்கப்பட்ட வேண்டும் என்பது என் அபிப்ராயம்.  அவற்றில் சில:- 

1.  நேர்மறை சிந்தனை -  எந்த புது சூழ்நிலையையும், சிக்கலையும்  நேர்மறை சிந்தனையோடு எதிர்கொண்டு  அதிலிருந்து மீண்டு வரும் திறன்.

2.  எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செய்யும் திறன்.

3.  சரியான நேரத்தில் ,துணிச்சலாக முடிவெடுக்கும் திறன்.

4.  இலக்குகளை நிர்ணயித்து வாழும் பழக்கம் ( சிறுசிறு இலக்குகள் / பெரிய இலக்குகள்)

5.  தன்னம்பிக்கை, சுயமதிப்பு - தன் பலம், பலவீனங்களை அறிந்துகொண்டு - பலத்தை முன்னிலைப்படுத்தி அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளல்.

6.  சுறுசுறுப்பு, உடல் ஆரோக்யம், உடல் வலிமை - நம் முன்னோர்களின் பாரம்பரிய கலைகளான யோகாசனங்கள், தியானம், வர்மக்கலை, சிலம்பம், பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம் மேலும் இதுபோன்ற கலைகளை  குழந்தைகளின் வயதிற்கேற்ப கற்றுக்கொடுத்தல்.

7. மிகமுக்கியமாக, சக மனிதர்களோடு எப்படி அன்போடு, பொறுமையோடு விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது.  சக மனிதர்கள் சிரமப்படும்போது அவர்களுக்கு உதவுதல் - என்பதை கற்றுக்கொடுத்தல்.


மேற்கண்ட விஷயங்களை படிப்படியாக கற்றுக்கொண்ட குழந்தைகள் சுமார் 20 வயதுக்குள் உலகில் அசைக்க முடியாத சொத்துக்களாக மாறிவிடுவார்கள். அவர்கள் மூலமாகவே நாம் புது உலகை படைக்க முடியும், அமைதியை கொண்டுவர முடியும். இதில் விட்டுப்போன கலைகளை, விஷயங்களை, திறன்களை நீங்களே சேர்த்துக்கொள்ளுங்கள்.


இக்கட்டுரையை படிக்கும் நண்பர்களுக்கு எவ்வாறு இப்படி குழந்தைகளை வளர்ப்பது என மலைப்பாக இருக்கும். அவர்களுக்கு ஒரு குறிப்பு தருகிறேன்.  முதலில் நீங்கள் ஓரளவு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் அது தொடர்பான புத்தகங்கள், விடியோக்களை கேட்க படிக்க வேண்டும். அறிஞர்களை சந்தியுங்கள், அவர்களோடு இது தொடர்பாக உரையாடுங்கள். நினைத்தால் முடியாததல்ல. உதாரணமாக, 


சகோதரர் ஹீலர் பாஸ்கர் 




இவரை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. சகோதரர் , மருந்தில்லாமல் நோய்களை குணமாக்கும் முறை, குழந்தை வளர்ப்பு ( பானு வீட்டுக் கல்வி முறை ), உலகை ஆளும் வர்க்கம் எவ்வாறு உலகை நாடுகளை ஆட்டிப்படைக்கிறது  என்பது போன்ற எண்ணற்ற தலைப்புகளில் வீடியோ உரைகளை, நூல்களை வெளியிட்டுவருகிறார்.  ஹீலர் பாஸ்கர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள " பானு வீட்டுக்கல்வி முறை "  எனும் புத்தகம் மிக சிறப்பான புத்தகமாகும். 

குழந்தைகளுக்கு  தடுப்பூசி போடாதீர்கள், அனாவசியமாக மருந்து மாத்திரைகள் கொடுக்காதீர்கள். குழந்தைகளை  சுதந்திரமாக இயல்பாக - ஆரோக்கியமாக வளர விடுங்கள்.  உலகை ஆளத்  துடிக்கும் வர்க்கத்தின்  உள்நோக்கத்தை புரிந்துகொள்ளுங்கள்.


ஹீலர் பாஸ்கரின் வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.


ஐயா போதி பிரவேஷ் அவர்கள் 


தந்த்ரா யோகி போதி பிரவேஷ் அவர்கள் சமீபத்தில் " காதல் அறிவியல் "  என்ற நூலை வெளியிட்டுள்ளார்.  இதைப்போன்ற நூலை நிச்சயமாக நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.  பெற்றோர்கள் நிச்சயமாக படித்தே ஆக வேண்டிய நூல். பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது  இனக்கவர்ச்சியின் உந்துதலால் - காதலித்து , இலட்சியங்கள்  இல்லாமல் - மனப்பக்குவம், வருமானம் இல்லாத வயதில் திருமணம் செய்து கொண்டு அல்லது காதலில் வருடங்களை வீணடித்து வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை - நெற்றிப்பொட்டில் சிலம்புக்கம்பை கொண்டு பொட்டு வைக்கிறது இந்நூல். 

எது உண்மையான காதல்?  எது இனக்கவர்ச்சி ? எது  காமம் உந்தித்தள்ளும் காதல் ?  - போன்ற பல விஷயங்களை மிக அற்புதமாக தெளிவுபடுத்துகிறது இப்புத்தகம். படிக்கும்போதே, திகைப்பாக இருக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் கண்டிப்பாக இந்நூலை படித்து விடுங்கள்.  முடிவாக உங்கள் குழந்தையை, பருவ வயதிற்கே உரிய சஞ்சலங்களுக்கு ஆட்படாமல் எப்படி லட்சியவாதிகளாக வளர்ப்பது என்பதை ஐயா விளக்குகிறார். இப்புத்தகம் அமேசான் வலைத்தளங்களில் கிடைக்கிறது.  அல்லது புத்தகத்தை பெற பின்வரும் எண்ணை  தொடர்பு கொள்ளவும் : 96 26 404 604.  ஐயா  அவர்களின் " தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை " எனும் ஏற்கனவே வரலாறு காணாத அளவில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.


நாம் ஏற்றி வைக்கும் சிறு தீபம் என்றோ ஒருநாள் புது உலகை படைக்கும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரை முடிக்கிறேன். வாழ்க வையகம் ! வளமுடன் !


P.LINGESWARAN
Assistant Professor / MBA

Comments