எனக்குப் பிடித்த கடவுள் . .





ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஒவ்வொரு சிலைக்கு பின்னாலும் ஒரு கதை ஒளிந்துள்ளது. விக்ரகங்கள் என்பவை உண்மையா புளுகா என்பது வேறு விஷயம். ஆனால் அக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு என தனிப்பட்ட சில குணாதிசயங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி பார்த்தால் , ஆஞ்சநேயர் பின்வருமாறு Describe செய்யப்படுகிறார்:-  வலிமையான உடல், மனோதிடம் பெற்றவர், எதையும் செய்து முடிப்பவர், பிரம்மச்சாரி , நன்றியுணர்வு மிக்கவர், துடுக்கானவர். ஆஞ்சநேயர் வடிவமே அலாதியானது. 



பல உளவியல் அறிஞர்கள் (Ralph Waldo Emerson ) கூறியுள்ளபடி, ஒரு மனிதன் எதை அடிக்கடி நினைக்கிறானோ -அதே தன்மைகளை உடலிலும் மனதிலும் பெற்றுவிடுகிறான். இன்றைய காலங்களில் கர்ப்ப ஸ்தீரிகளுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில் விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றவர்களின் உருவங்களை, வரலாறுகளை நினைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.



ஆதலால்- உடல்பலம் மனோ தைரியம் குறைந்தவர்கள் , முடிவெடுக்க துணிச்சல் இல்லாதவர்கள், மனக்குழப்பம் உள்ளவர்கள், வாழ்க்கைத் துயரங்களில் தொடர்ந்து கஷ்டப்படுபவர்கள், சனி பகவானால் (அஷ்டம சனி) நடைப்பிணமாக ஆனவர்கள் இவர்களெல்லாம் - வாரம் இருமுறை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் நல்ல நிவாரணம் பெறலாம் என்பது என் நம்பிக்கை.


P.LINGESWARAN,
Assistant Professor / MBA

Comments