நமது மண்டையை அலசும் மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள்....







மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை விமானத்திலுள்ள Black Box போன்று கருதுகிறார்கள். மூளையானது பலகோடி நியூரான் எனப்படும் நரம்பு செல்களால் ஆனது. மனிதன் ஒவ்வொரு முறை சிந்திக்கும் போதும், ஒரு புது சூழ்நிலை அனுபவத்தை எதிர்கொள்ளும்போதும் பல்லாயிரக்கணக்கான நியூரான்கள் இணைந்து ஒரு Circuit  ஐ உருவாக்குகின்றன.

மார்க்கெட்டிங் துறையின் தலையாய நோக்கம் - நமது மண்டையை கழுவி தங்கள் பொருளை நம் தலையில் கட்டுவது என்பது உங்களுக்கு தெரிந்ததே. எனினும், மனித மனம் ,ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் ஒரு புதினமாகவே இருக்கிறது. அவர்கள் மூளையின் வாயிலாக மனதை அறிந்துகொள்ள முற்படுகிறார்கள். காலப்போக்கில்  மனித சிந்தனையில், ரசனையில், தேவைகளில், விருப்பங்களில் கணிக்க முடியாத மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் - மார்க்கெட்டிங் நிபுணர்கள் மனிதர்கள் சிந்திக்கும்விதம் அதாவது குறிப்பாக எவ்வாறு மனிதர்கள்  முடிவெடுக்கிறார்கள், எந்த உணர்வால் தூண்டப்படுகிறார்கள் போன்றவற்றை கணிக்க நியூரான்களின் அமைப்பை Neural Network -களில் (Neural Marketing) உருவாக்குகிறார்கள். இந்த ஆராய்ச்சி தற்போது Machine Learning என்ற புது தலைப்பில் வந்து நிற்கிறது.

வணிக விற்பன்னர்கள் தற்போது Big Data Analytics எனும் ஆராய்ச்சியில் - உலகின் வறுமையை போக்க - மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் கொட்டி கிடைக்கும் தகவல் குப்பை மேடுகளில் இருந்து - மக்களின் சமீபத்திய ரசனைகள், போக்குகள், உரையாடல்கள், அடிக்கடி பிரயோகப்படுத்தும் வார்த்தைகள், பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் ஆகியவற்றை நிதானமாக ஆராய்ந்து ,நுணுக்கமாக எழுதப்பட்ட Algorithm கள் மூலமாக  ஆராய்ந்து - அதிலிருந்து பெறப்படும் முடிவுகளை தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். 1950-களில் துவங்கிய AI எனும் ராட்சத பிராணி இப்போது நாம் நினைப்பதை விட அதிபயங்கர வேகத்தில் முன்னேறி வருகிறது.


P.LINGESWARAN

Assistant Professor / MBA


Comments