தற்போது ( ஆண்டு: 2016) யாரும் படிக்கும் கல்விக்கும், பெறும் சம்பளத்துக்கும், கௌரவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேடு தட்டி தட்டி சரியாகிக் கொண்டே வருகிறது. ஹோட்டலில் சர்வராய் வேலை செய்பவர் ME பிடித்தவரை விட அதிகம் சம்பாதிக்கிறார். வித்யா கர்வம், ஒரே வர்ணம் போன்றவை அதிசீக்கிரத்தில் மறையப் போகிறது. பொதுவாக நிறைய படிப்பவர்களுக்கு, தாம் ஒரு அறிவாளி என்ற எண்ணம் இருக்கும். அது தவறு என சில நொடிகளில் நிரூபித்து விடலாம். அசல் வட்டி கணக்கை நமது மளிகைக் கடை அண்ணாச்சிகளும், அப்பாமார்களும் போடும் நேரத்தை விட Gen Z தலைமுறையினர் கூடுதலாகவே எடுத்துக்கொள்வர். இந்த Gen Z தலைமுறையினரே வருங்கால தொழில்நுட்ப, வணிக, அரசியல் சமூக மாற்றங்களை நிர்ணயிக்க போகின்றனர் என்பது என் யூகம். ஆனால் இவர்களிடம் படிக்கும் பழக்கம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அனைத்தையும் மொபைலில் படித்துக்கொள்வோம் என்கிறார்கள் இவர்கள். அது நிச்சயமாக இவர்களால் முடியாது. ஏனென்றால் Coolidge Effect -ன் படி இந்த தலைமுறையினர் மொபைல் இன்டர்நெட்டுக்கு அடிமைகள்தான் ஆவாரே பொறுமையாக தவிர படிக்க முடியாது.
LINGESWARAN
26/10/2016
26/10/2016
Comments
Post a Comment