மனம் அமைதி பெற வழி . .





மனோதத்துவம் எளிமையானது. நீங்கள் பேஸ்புக்கில் கவனித்தீர்களேயானால், பல நண்பர்கள் தங்கள் கஷ்டங்களை share செய்வார்கள். எப்படியெனில் யாரும் நேரடியாக share செய்ய மாட்டார்கள், ஏதோ ஒரு படம் அல்லது வாசகங்கள் மூலம் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவார்கள். நண்பர்களே, பெரும்பாலோர் வாழ்க்கை துன்பங்களும் துயரங்களும் நிறைந்ததாகவே உள்ளது. எனினும் அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது.  கடந்தகால கசப்பான சம்பவங்கள், துக்ககரமான எண்ணங்கள் இவையாவும் நம் மனதில் அழுத்தமாக பதிந்து - மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து நம்மை துன்புறுத்துகின்றன. இதனால் சரியாக தூக்கம் வராது ; சரியாக பசி எடுக்காது;  உடல் சோர்வாக இருக்கும்;  முகம் பொலிவிழந்து விடும்.  இந்த ' எண்ணங்களின் பிரதிபலிப்பு இயக்கம்'  ஓர் எல்லை மீறும்போது  - அவ்வெண்ணங்கள் ஒருவரை ஒரு குறிப்பிட்ட செயலை செய்யுமாறு மீண்டும் மீண்டும் ( அவர் விரும்பாமலே) தூண்டதுவங்கும். இந்நிலையில் உடலும், உள்ளமும் மிகவும் தளர்ந்து விடும்.  இதனை  மனநல மருத்துவர்கள்  OBSESSIVE COMPULSIVE DISORDER (OCD) - எண்ண சுழற்சி நோய் என அழைக்கிறார்கள். 



உண்மையில், மனமானது எதையும் சிந்திக்காமல் - எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு இருப்பதே உண்மையான அமைதி நிலையாகும். இதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் , நான் உங்களுக்கு மிக எளிமையான  பயிற்சி ஒன்றை கூறுகிறேன். ஒரு தியான முறை போல நீங்கள் இதை கருதலாம். 



பயிற்சி முறை:-  

தனிமையில் ஒரு விரிப்பில் தியானம் செய்வதுபோல்  (படத்தில் இருப்பதைப்போல விரலை வைத்துக்கொண்டு)  அமர்ந்து கொள்ளவும். இரவு நேரம் உகந்தது. உணவுக்கு முன் செய்வது  நல்லது.  அதிக வெளிச்சம், சத்தம், வேறு இடைஞ்சல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். கண்களை மூடவும். இப்போது உங்கள் மனதில் பல்வேறு எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக  தோன்றும். ஒவ்வொரு எண்ணத்தையும், 

1.  ஆராயக் கூடாது  - Dont analysis .

2.   நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என பிரிக்கக் கூடாது -  Dont discriminate.

3.   புனிதமான எண்ணங்கள், கீழ்த்தரமான எண்ணங்கள் என தீர்ப்பிடக் கூடாது - Dont judge.

மனதில் உருவாகும் எண்ணங்களை அதன் போக்கில் விட்டு , நீங்கள் ஒரு பார்வையாளராக ( Spectator/Viewer ) கவனித்துக்கொண்டு மட்டும் இருக்க வேண்டும்.  ஏராளமான எண்ணங்கள் ( சோகம், கோபம், வருத்தம், காதல் தோல்வி, கருத்து வேறுபாடுகள், பாலியல் எண்ணங்கள், பணப் பிரச்சினை, குடும்ப சண்டைகள் இது போன்றவை)  வந்துகொண்டே இருக்கும். இவையெல்லாம் எங்கே இருந்தன?  நம் மனதில்தான் அழுந்திக்கொண்டு  இருந்தன. 



இவற்றை நீங்கள நோண்டாமல் சுதந்திரமாக விட்டுவிட்டால் , அவை தானாகவே Release ஆகி  Exhaust ஆகிவிடும் (சக்தி தீர்ந்து விடுவது போல).  மாறாக, ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய துவங்கினால் - மதிப்பிடத்  துவங்கினால் - அவை Chain reaction மாதிரி விஸ்வரூபம் எடுத்து மூளையை இறுக்கமாக்கி விடும். ஆனால் பொதுவாக நாம் அப்படிதான் செய்வோம். 




இந்த பயிற்சியை நீங்கள் தினமும் 10 முதல் 30 நிமிட, வரை செய்ய வேண்டும்.  நல்ல அமைதியான சூழ்நிலை இருந்தால்  எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.  தொடர்ந்து செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும், ஜீரண கோளாறுகள் சரியாகும், முகம் பிரகாசமாகும். தவறான காரியங்களை செய்யும்போது , செய்யக்கூடாது  என்ற விழிப்புணர்வு  Mindfulness வரும்.

LINGESWARAN
02/06/2016
DINDIGUL, TAMILNADU.

Comments

Post a Comment