இந்திய ஊழியர்கள் பெரும்பாலோருக்கு தங்கள் முதலாளியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட வேண்டுமென்ற ரகசிய எண்ணம் சிலநேரம் தோன்றும். இதற்கு காரணம், காரல் மார்க்ஸ் கூறிய Exploitation of Surplus Value. நம்மில் பலருக்கும் - பணியில் சக உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகள் இவர்களிடம் - ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ' சார், உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? ' என கேட்க தோன்றும. ஆனால் நாம் யாரும் அப்படி கேட்டு விடுவதில்லை.
கோஹல்பேர்க் (Lawrence Kohlberg) எனும் அமெரிக்க உளவியல் நிபுணர் ஒரு மனிதனின் மனதில் மனசாட்சி (Conscience ) என்பது எப்படி படிப்படியாக உருவெடுக்கிறது என்பதை குழப்பியடிக்காமல் எளிமையாக சொல்லியிருக்கிறார். ஒருவர் குழந்தைப்பருவத்தில் தன் இன்பத்தை மட்டுமே முன்னிறுத்தி, சுயநலமாக செயல்படுவார். துன்பத்தை தவிர்க்கப் பார்ப்பார். குழந்தையிலிருந்து வாலிபனாகும் போது - சுயநலம் எனும் குறுகிய வட்டத்திலிருந்து சற்றே வெளியே வந்து - சமுதாயத்தின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் இவற்றிற்கு பணிந்து நடக்க துவங்குவார். சமுதாயத்தின் கழுகுப் பார்வையில் தன்னை உத்தமனாக காட்டிக்கொள்ள முயல்வார் என்பதே சரி. வாலிப வயதையும் தாண்டி 40 வயதுக்கு மேல் - வாழ்க்கை அனுபவங்களால் பக்குவப்பட்டு - மனதின் உள்ளே இருக்கு ம் உண்மையான மென்மையான ஒரு பகுதி வேலை செய்யத்துவங்கும். அதுதான் மனசாட்சி. இதற்கு யாரும் சட்டம் போட தேவையில்லை. ஏனெனில் மனசாட்சி என்பது தனக்கு மேல் கட்டுப்படுத்த யாரும் இல்லாத ஓர் நேர்மையான சர்வாதிகாரி. இயல்பாகவே இது ஒருவரை நல்லவனாக வாழ அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
கொஹல்பேர்க் இதை Conventional level , Preconventional level, Principled level என்கிறார். வயது ஏற ஏற ஒரு மனிதன் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்வார். ஆனால் உலகில் 25% சதவீதத்திற்கும் குறைவான மக்களே மனசாட்சி முழுமையாக வேலைசெய்யும் நிலையை எட்டும் என்கிறார் கொஹல்பேர்க்..!
LINGESWARAN
04/04/2016
DINDIGUL.
LINGESWARAN
04/04/2016
DINDIGUL.
Comments
Post a Comment