இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய புத்திமான் யாரென தெரியவில்லை. பாம்பே டாய்லெட் நாம் வழக்கமாக பயன்படுத்துவது. வெ.டாய்லெட்டின் அனுகூலங்களாக சொல்லப்படுபவை :-
1. மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள்
2. உடற்பருமன் உள்ளவர்கள் - இவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதே.
பாரம்பரிய யோகாசன முறையில் 'உட்கட்டாசனம் ' என ஒன்று உண்டு. இதன் பலன்கள்: -
- தொடைகள் வலுப்பெறும்
- தொப்பை குறைந்து அடிவயிறு இறுக்கமடையும்
- இதயத்துடிப்பு சீராகும்
வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துவோர் அனைவரும் , கால் கழுவும்போது, இந்த உட்கட்டாசனத்தை மறைமுகமாக செய்கிறார்கள் என்றே கருதுகிறேன். ஆனால் பலன் கிடைப்பதற்கு பதில், இதில் ஒரு அபாயம் இருக்கிறது. பாம்பே டாய்லெட்டில் உட்காரும்போது (குத்தவைத்து) - உடல் எடை முழுவதும் - கீழ்நோக்கி செயல்படுவதால் மலம் வெளியேறுவது எளிதாக இருக்கும். அதிகமாக முக்க தேவையில்லை. மேலும் ஆசன வாயை சுத்தம் செய்வதும் எளிது. மாறாக, வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலோட்டமாகவே நாம் அமருவதால் - மலத்தை வெளியேற்ற - நாமாகவே அழுத்தம் கொடுத்து (தம் கட்டி) முக்க வேண்டியிருக்கும், மலமும் சுத்தமாக கழிய வாய்ப்பில்லை. கீழே உட்கார்ந்து எழும்போது அதுவே ஒரு உடற்பயிற்சியாகும். இதை தவிர்த்தால் நீங்கள் ஒரு உடற்பயிற்சியை, நல்ல ஒரு உடல் இயக்கத்தை தவிர்க்கிறீர்கள் என்று பொருள். சொல்லப்போனால், வெ. டாய்லெட்டை தொடர்ந்து பயன்படுதுவோர்கே கை கால் வலி வரும்.
ஆகையால், வெஸ்டர்ன் டாய்லெட்டை நீண்ட காலம் பயன்படுத்துவோர் கீழ்க்கண்ட உபாதைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பது என் தாழ்மையான எண்ணம்: -
- இதய பலகீனம்
- மூட்டு வலி , கால் வலி
- மலச்சிக்கல்
சிலர் வெ.டாய்லெட்டில் மேலே ஏறி குத்தவைத்து உட்கார்ந்து போகலாம் என்கிறார்கள். ஆனால் உடைந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதற்குபதிலாக, செராமிக் பிளேட்டுகளை இருபுறமும் அட்டாச் செய்து கொண்டு, அதன் மேல் உட்கார்ந்து கொள்ளலாம் என்பது எனக்கு நல்ல ஐடியாவாக படுகிறது.
LINGESWARAN
29/12/2015
Comments
Post a Comment