சமீபத்தில் நான் வாங்கிய புத்தகங்கள் . . (மதுரை புத்தக கண்காட்சி - 2015)..




மதுரை புத்தக கண்காட்சி பத்தாவது வருடமாக (28/08/15 to 07/09/15) இந்த ஆண்டு 2015 நடைபெற்றது.  முதல் வருடம் 2004 -ம் ஆண்டோ, 2005-ம் ஆண்டோ மிகுந்த ஆர்வத்துடன் சென்று சிறுபிள்ளைதனமான புத்தகங்கள் ( அக்குபஞ்சர் மூலம் எப்படி எல்லா நோய்களையும் சரிசெய்வது?,  ஒரே மாதத்தில் C , C + -ல் கலக்குவது எப்படி?,  உங்கள் லக்னத்தின் வாழ்நாள் பலன்கள், Speak better English ...)  நிறைய வாங்கி வந்தேன். 

பத்து  வருடங்கள் கழித்து அதே புத்தக கண்காட்சி.  இப்போது வேகம் குறைந்திருந்து. புத்தக தலைப்பை பார்த்தவுடன் சட்டென பாய்ந்து வாங்கும் ஆர்வம் குறைந்து, நிதானம் வந்திருந்தது.  இந்தமுறை நான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் ஆச்சரியமான தற்செயலாக, மருத்துவம்/உளவியல்/வாழ்வியல் பற்றியே அமைந்துவிட்டது. இப்போது ஒரு  புத்தகத்தை பார்த்த ஷணத்தில், அந்த புத்தகத்தின் விலை, உள்ளடக்கம் ஆகிவயற்றை பற்றி என்னால் சொல்ல முடியும்.  ஏனெனில், நம் சமூகத்தில் எல்லாப் பொருட்களைப் போலவும் புத்தகங்களும்  எப்போதோ Commercial  ஆக்கப்பட்டு விட்டன.  ஒரு டூபான்ஸ் புஸ்தகத்தை கண்டிபிடிப்பது மிக எளிதான காரியம் : -

1.  தலைப்பு  வசீகரமாக இருக்கும்.  (  செல்வதை  அள்ளித்  தரும் பல்வேறு யோகா முத்திரைகள், ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதிங்க  .... இது மாதிரி தலைப்புகள்)

2.  நூலின் தாள்கள் நல்ல தரமானதாக ( Quality ) இருக்கும். உள்ளே சரக்கு இருக்காது.

3. விலை உத்தேசமாக 300 - 500 ஆக இருக்கும், ஆங்கில புத்தகங்கள் எனில் 500 க்கு மேல். 

நான் வாங்கிய முத்துக்களின் பட்டியல் :-

1.  ஆயுர்வேத உபதேசம்  பாகம் 1, 2  ( தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் வெளியீடு )
2.  வாழ்வின் அடிப்படை  ( மதுரை இயற்கை நல்வாழ்வு சங்கம்,. கந்தசாமி முதலியார், 1958)
3.  பிரமச்சர்யம் ( மதுரை இயற்கை நல்வாழ்வு சங்கம்,. மகரிஷி. அருணாசலம் அவர்கள்)
4.  அதிக ரத்த அழுத்தம் ( மதுரை இயற்கை நல்வாழ்வு சங்கம்,. கந்தசாமி முதலியார், 1958)
5.  மனநல மருத்துவர் இல்லாத இடத்தில் ( Dr. விக்ரம் படேல், புறம் வெளியீடு, புத்தாநத்தம்)
6.  Time Management ( 30/-)
7.  வேலையை காதலி ( தி ஹிந்து பப்ளிகேஷன், திரு.கார்த்திகேயன்) 
8.  Story of Life  - வேதாத்திரி மகரிஷி .
9.  One small step can change your life - Kaizen approach (Dr. Robert maurer )
10. முழுமை அறிவியல் உதயம்.
11. CIMS Book (Details of English Medicine)

இந்த புஸ்தகங்களில் எதுவுமே அதிகபட்சம் ரூ. 200-ஐ தாண்டவில்லை. மொத்த விலை 1150 / -.


ப.லிங்கேஸ்வரன்.
11/09/2015.

Comments