டெக்னாலஜியை அதிகம் நம்பாமல், இசைக் கருவிகளையும் உள்ளுணர்வையும் பயன்படுத்தி இசை அமைப்பாளர்கள் இசையமைக்க வேண்டும் என் இசைஞானி இளையராஜா அண்மை விழா ஒன்றில் புது இசை அமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அனிருத், விஜய்ஆண்டனி, தேவி ஸ்ரீப்ரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர்ராஜா போன்றவர்களெல்லாம் எதாவது முயற்சி செய்கிறார்களா என்றே தெரியவில்லை. இப்போதுள்ள இளைஞர்களுக்கு மேற்குறிப்பிட்ட இசை அமைப்பாளர்களின் இசையே தேவகானம் என்பது எனக்கு தெரியும். இருந்தபோதிலும், அவர்கள் இளையராஜாவின் இசையை ஒரு தடவையாவது கேட்க வேண்டும்.
நான் பொறியியலில் சேர்ந்தபோது எனக்கு வயது 18. ஹார்மோன்களின் உச்சகட்டம். அங்கிருந்த பலதரப்பட்ட நண்பர்களின் பரிச்சயத்தால் இளையராஜா எனக்கு மெல்ல மெல்ல அறிமுகமானார். ஒரு புது உலகில் பிரவேசிக்க துவங்கினேன். சிக்மண்ட் பிராய்டு என்ற உளவியல் மேதை ' 13 வ்முதல் 23 வயது வரை (உத்தேசமாக) ஒரு பெண் அல்லது ஆணின் கவனம் முழுவதும் எதிர்பாலினரின் மேலேயே இருக்கும் ' என்கிறார். இதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. அந்த கவனத்திற்கு (காதல்?) இளையராஜாவின் இசை மிகப் பொருத்தமான விருந்தாக அமைந்தது. நான், நண்பர்கள் மாரியப்பன், கணேஷ், கார்த்திகேயன் ஆகிய நால்வரும் இளையராஜாவின் இசையை பலகோணங்களில் குடலாப்ரேஷன் செய்வோம். இதில் கார்த்திகேயனுக்கும் மற்ற நாங்கள் மூவருக்கும் திடீரென ஒரு விவாதம் வெடிக்கும். அது இளையராஜாவா , ஏ.ஆர்.ரஹ்மானா? என்பதே. முடிவு உங்களுக்கே தெரியும். நாங்கள் ரசித்த விவாதித்த படித்த, இளையராஜாவின் இசைத் துணுக்குகளுக்கும், பாடல் வரிகளுக்கும் அளவே இல்லை.
என் தந்தை 2012-ல் இறந்து விட்டார். தாங்க முடியாத சோகத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேலை முடிந்து வருவேன், சிறிது நேரம் ஓய்வு. பின் வெளியே சென்று ஒரு டீ குடித்துவிட்டு இன்டர்நெட் கடலில் மூழ்கி விடுவேன். ஆனால் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் கேட்டு சலித்துவிட்டது போன்ற ஒரு உணர்வு. ஏற்கனவே நிறைய பாடல்கள் மனப் பாடமாகி விட்டன. அப்போது திடீரென யூ டியுபில் இ.ராஜாவின் பின்னனி இசைக் கோர்வைகள் சில கிடைத்தன. என்ன ! அவற்றை கேட்க கேட்க இதயமே உருகிவிடும் போல் இருந்தது. சில நாட்கள் முன் நானும், என் சிறிய தாயார் மகள் சரண்யாவும் பேசிக்கொண்டிருந்த போது அவள், ' இளையராஜாவின் பாடல்கள் நன்றாக உள்ளன, அதற்காக கண்ணிலிருந்து கண்ணீர் வருமா? என் நகைப்புடன் கேட்டாள்.' கண்டிப்பாக வரும். இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில் நாட்டுப் புறத்தான் பிம்பமாக பதிந்திருக்கும் இளையராஜாவின் பின்னனி இசைக் கோர்வைகள் சிலவற்றை கீழே தந்துள்ளேன். இவற்றை கேட்பதற்கு இரண்டு நிபந்தனைகள். தனிமையில் கேட்க வேண்டும், ஹெட் போனில் மட்டும் கேட்க வேண்டும். சில இசை, நீங்கள் தனியாக நடக்கும்போது உடல் திடீரென லேசாகி, யாரோ ஒருவர் உங்கள் கரங்களை பிடித்து தூக்கிக் கொண்டு வானில் பறப்பது போல் இருக்கும். சில இசை அதிரடியாக.
1. https://www.youtube.com/watch?v=ylyIBeGm7sk
2. https://www.youtube.com/watch?v=K7w3rdbJ3Ok
3. https://www.youtube.com/watch?v=3sXJdEfX4uw
4. https://www.youtube.com/watch?v=cD0ngEQ_W8E
5. https://www.youtube.com/watch?v=kWPO0J2NWGw
6. https://www.youtube.com/watch?v=X5q57HybskE
7. https://www.youtube.com/watch?v=dmAqcdyY14s
P.LINGESWARAN,
1. https://www.youtube.com/watch?v=ylyIBeGm7sk
2. https://www.youtube.com/watch?v=K7w3rdbJ3Ok
3. https://www.youtube.com/watch?v=3sXJdEfX4uw
4. https://www.youtube.com/watch?v=cD0ngEQ_W8E
5. https://www.youtube.com/watch?v=kWPO0J2NWGw
6. https://www.youtube.com/watch?v=X5q57HybskE
7. https://www.youtube.com/watch?v=dmAqcdyY14s
P.LINGESWARAN,
Comments
Post a Comment