விசித்திரமாக காட்சியளிக்கும் வேதியியல் அமைப்பை கொண்ட இவ்வஸ்துவின் பெயர் ஆர்சனிக். நாக்கில் ஒரு துளி பட்டால் சில நிமிடங்களில் ஆள் காலி. ஏறக்குறைய அனைத்து தனிம கனிம உலோகங்களிலும், மனிதன் உட்பட சகல ஜீவராசிகளின் உடல்களில் ஆர்சனிக் குறிப்பிட்ட அளவு கலந்தே இருக்கிறது. Arsenic content in the drinking உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. WHO நிர்ணயித்த ஆர்சனிக் லிமிட் 10 ppb.. இதற்கு மேல் ஆர்சனிக் கண்டென்ட் இருந்தால் காலப்போக்கில் புற்றுநோய், கடுமையான தோல் வியாதிகள் போன்றவற்றை உண்டாகும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். உண்மை இப்படியிருக்க, ஆர்சனிக் நவீன மருத்துவத்தில் புற்றுநோயை குணமாக்கவும் பயன்படுகிறது.
ஹோமியோபதி வைத்தியத்தில் ஆர்சனிக் ஓர் சர்வரோக நிவாரணியாகும். ஆனால், ஆங்கில மருத்துவத்தில் ஆர்சனிக் பயன்படும் விதமும், ஹோமியோபதியில் பயன்படும் விதமும் முற்றிலும் வேறுபட்டவை. எப்டியெனில், ஆர்சனிக் தனிமம் சிறிது எடுத்துக் கொண்டு, ஆல்கஹால் நிரம்பிய சிறு Bottle ஒன்றில் அதை கலந்து நன்கு பலமுறை குலுக்குகிறார்கள். பின்,அதில் ஒரே ஒரு சொட்டு எடுத்து மற்றொரு ஆல்கஹால் பாட்டிலில் சேர்த்து அதை பலமுறை நன்கு குலுக்கிறார்கள். பின் மீண்டும் அதிலிருந்து ஒரு சொட்டு எடுத்து மற்றொரு ஆல்கஹால் பாட்டிலில் சேர்த்து பலமுறை குலுக்குகிறார்கள். இதேபோல்,பத்து, நூறு, ஏன் ஆயிரம் தடவை கூட செய்கிறார்கள். கடைசி முறை அதாவது நூறு அல்லது ஆயிரம் முறை குலுக்கிய பிறகு அந்த பாட்டிலில் ஆர்சனிக் இருக்குமா? யோசித்து பாருங்கள். எந்த துல்லியமான மைக்ராஸ்கோபிலும் பிடிபடாத அளவு, நுண்ணிய அள்வில் ஆர்சனிக் அணுக்கள், ஆல்கஹால் அணுக்களுடன் கலந்திருக்கும். இதை ஹோமியோபதியில் வீரியப்படுத்துதல்(Potency) என்கிறார்கள். பத்து, நூறு ஆயிரம் என வீரியபபடுத்துதல் அதிகமாக அதிகமாக ஆர்சனிக் விஷத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது. அதே நேரம், அதன் அணுக்களில் அடங்கியுள்ள காந்த சக்தி(குவார்க், போட்டான், கிளூவான்?) வெளிப்பட துவங்குகிறது.
எப்ப்டி சாதாரண ஆர்சனிக் உடலின் செல்களை எல்லாம் தாக்கி மரணத்தை சம்பவிக்கிறதோ, வீரியப்படுத்தப்பட்ட ஆர்சனிக் இதே ரீதியில் காந்த அலைகளாக எல்லா செல்களிலும் உள்ள கோளாறுகளை சரிசெய்கிறது. வயிற்றுப்புண், வாய்ப்புண், சளி, காய்ச்சல், உடல் வலி, மன எரிச்சல், தூக்கமின்மை, அஜீரணம் என சகல ரோகஙகளையும் குணப்படுத்தும் மாயாஜாலம் ஹோமியோவில் மட்டுமே நிகழ்கிறது. பக்க விளைவுகள் என்பதே இல்லை.
முதல் உலகப்போரில், அமெரிக்கா ஆர்சனிக்கை ஒரு உயிரியல்-ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறது. போர்ககளத்தில் ஆர்சனிக் பவுடரை தூவி - சுவாசக்குழாய்களில் எரிச்சல், கண் பார்வை மங்குதல் போன்றவற்றை ஏற்படுத்தி எதிரிகளை திணறடித்து இருக்கின்றனர். ஆர்சனிக் (Arsenic coating) கோட்டிங் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளால் சுட்டால் சாவு நிச்சயம். பூச்சிக்கொல்லிகள், பெப்சி கோக் போன்றவற்றில் கூட ஆர்சனிக் கலந்திருக்கிறது என்கிறார்கள்.
P.Lingeswaran
Assistant Professor of Mechanical Engineering.
Comments
Post a Comment