மூன்று கோடுகள் கொண்ட இந்த ஓவியம் அறிவியலின் முன்னேறிய பல இயல்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ பயன்படுகிறது. இயற்பியல், உலோகவியலில் இது Hooke's Law எனப்படுகிறது. ஓர் ஆப்ஜெக்ட் அல்லது உலோகம், விசை அல்லது அழுத்தத்திற்கு தொடர்ந்து உட்படுத்தபடும்போது, அதில் விரிவோ (Extension), உருமாற்றமோ(Distortion of the shape) நிகழ்கிறது. விசையின் குறிப்பிட்ட ஓர் அளவு வரை இவ்வுருமாற்றம் - விசைக்கு - நேர் விகிதத்தில் இருக்கும். அவ்வெல்லைக்குள் விசையை நீக்கிவிட்டால் உலோகம் தன் பழைய நிலைக்கு (Recovery to its' original shape) மீண்டு விடும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையை தாண்டியும் அழுத்தம் கொடுக்கப்பட்டால் பொருளின் சிதைவு அப்படியே நிலைத்து விடும்.
துல்லியமாக இதேபோல் (Analogy to this), மனித உடலும் அழுத்தங்களை தாங்கும் எல்லையை பெற்றுள்ளது. உடலுக்கும் உள்ளத்திற்கும் உண்டாகும் நோவுகளை மனித உடல் - குறிப்பிட்ட ஓர் எல்லை வரை தாங்கிக்கொண்டு - தன் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் திறனை உள்ளார்ந்த பண்பாக கொண்டுள்ளது. அதற்கு மேலும் உடலுக்கோ, மனதிற்கோ அழுத்தம் கொடுக்கப்பட்டால் அவை வடுக்களாக நோய்களை உடலில் விட்டுச் செல்கின்றன. இங்கு, அழுத்தம் என்ற சொல்லின் அர்த்தத்தை சிந்திக்கவும்.
ப.லிங்கேஸ்வரன்.
13/12/2014
13/12/2014
Comments
Post a Comment