அனேக தமிழ் குடும்பங்களில் பால் இல்லாத நேரங்களில் வறட்டீ (Black Tea) போட்டுக் குடிப்பது வழக்கமாக இருக்கிறது. அதே நேரம் வறட்டீ குடிப்பது தமிழ்நாட்டில் கௌரவ குறைச்சலாக கருததப்படுகிறது. கேரள போன்ற சில மாநிலங்களிலும், மேலை நாடுகளிலும் பார்ட்டிகளில் விருந்தினருக்கு வறட்டீ தரப்படுகிறது. தமிழர்கள் வறட்டீ போடும்போது ஒரு தவறு செய்கிறாரகள். நீரில் டீ தூளை போட்டு நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்கிறார்கள். இம்முறை சரியல்ல. டீ மிகவும் துவர்ப்பாக இருக்கும்.
கேரளாவில் பிரபலமாக கட்டாஞ்சாயா என அழைக்கப்படும் இட்டீ மிகவும் சுவையானது ஆகும். செய்முறையோ எளிதினும் எளிது. ஒரு டம்ப்ளர் சுத்தமான நீரை சில நிமிடங்கள் சுமார் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு டம்ப்லரில் கால் ஸ்பூன் (காலே ஸ்பூன்) டீ தூள், தேவையான அளவு ஜீனி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். கொதித்த நீரை டீ தூள், ஜீனியோடு சில முறைகள் ஆற்றி அப்படியே ஒரு நிமிடத்திற்கு வைத்து விடவேண்டும். டீ துகள்கள் கீழே மெதுவாக பதிந்து விடும். டீ துகள்களில் உறைந்துள்ள சுவையை சூடான நீரே வெளிக்கொணரும். டீயை வடிக்கட்ட கூடாது. ஒரு நிமிடம் முடிந்து அப்படியே சுவையான தேநீர் அருந்தி மகிழலாம்.
வறட்டீ இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கும் என்றும், அதில் சிலபல ஆன்டீ-ஆக்சிடெண்டுகள்(Anti-Oxidants) உள்ளன என்றும் சிறுவயதிலிருந்து தினமலரில் பத்தி செய்தியில் படித்து வருகிறேன். சீனர்கள் நெடுங்காலமாக வறட்டீ அருந்தி வருகிறார்கள். அவர்களின் சுறு சுறுப்பிற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்
ப.லிங்கேஸ்வரன்.
05/11/2014.
Comments
Post a Comment