கல்விக் குற்றவாளிகள் . .





சுயநலம் பாராது சமுதாயத்திற்காக உழைக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் (தாமதமான) ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியர் தினத்தன்று ஒரு மாணவன் பேனா ஒன்றை எனக்கு பரிசளித்தான். மாணவி ஒரு சாக்லேட் தந்தாள். வகுப்பில் நுழையும்போது மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். ஒருமைப் பெண் தன் கற்பை பாதுகாப்பது போல, ஆசிரிய உத்யோகத்திற்கு எந்தவித களங்கமும் வராமல் பார்த்து கொள்கிறேன். 


பிரதமர் மோடி கூறியது போல் ஆசிரியர் என்பது பணியல்ல, அது ஒரு தர்மம்; வித்யா தர்மம். தான் பெற்ற அறிவையெல்லாம் தனக்கென வைத்துக்கொள்ளாமல் மாணவர்களுக்கு தானமாக வழங்குவதுதான் ஆசிரியரின் கடமையாகும். ஆனால் இன்றைய ஆசிரியர்களின் நிலை எப்படி இருக்கிறது?  படு கேவலமாக இருக்கிறது. வட்டி தொழில், ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் தொழில், வகுப்பு நேரங்களில் சொந்த வேலைகளை பார்த்துக்கொண்டு ஓப்பி அடிப்பது போன்றவற்றில் ஈடுபடுபவர்க்ளை கல்விக் குற்றவாளிகள் என சொல்லாமல் வேற என்ன சொல்வது? இதில் கவனிக்க வேண்டியது என்ன்வென்றால், ஆசிரியர் உத்தியோகத்தை Secondary Business போல செய்வதுதான்.


ஒரு ஆசிரியர் முன் ஐம்பது மாணவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நம் சமுதாயமே அன்றி வேறல்ல. இதை ஆங்கிலத்தில் Representation என்பார்கள். Epitomize என ஒரு வார்த்தை இருக்கிறது. அப்படியானால் ஒரு ஆசிரியர் எவ்வளவு கவனமாகவும், பொறுப்பு உணர்வோடும் மாணவர்களை/மாணவிகளை கையாள வேண்டும்?


இன்றைய நிலையில் உருப்படியாக வேலை செய்யும் ஒரு ஆசிரியருக்கு இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பணிபுரிவது. ஆனால் இதில் பொறம்போக்குகள் ஒன்றுசேர்ந்து கொண்டு உங்களை ஹீம்சிப்பார்கள். இரண்டு, பொறம்போக்குகள் கூட்டத்தில் சேர்ந்து விடுவது. இதை உங்களது மனசாட்சி கடுமையாக சுட்டிக்காட்டி, அழுத்தம் கொடுக்கும். மனசாட்சியை விற்றுவிட்டால் இரண்டாவது வாய்ப்பு சுலபம்.

P.Lingeswaran,
Assistant Professor of Mechanical Engineering.

Comments