பாண்டியநாடு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறிவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு கமெர்ஷியல் சினிமா. என் மனத்தை இதுவரை கவராத விஷால் இப்ப்டத்தில் ஒரு இயல்பான, சராசரியான,வில்லனிடம் அடிவாங்கும் கதாபாத்திரம். நல்ல நடிப்பு. ஒருபுறம் லக்ஷ்மி மேனனுடன் ரொமான்ஸ், மறுபுறம் டமால் டுமீல் வில்லன் என சுவாரஸ்யமாக திரைக்கதையை கொண்டுசென்று ஓரிடத்தில் இரண்டு டிராக்குகளை ஒன்று சேர்க்கிறார் இயக்குனர். திரைக்கதை ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதற்கு இப்படம் உதாரணம்.
சில நாட்களுக்கு முன் குப்பைக்குள் ஒரு முத்து கிடைத்தது. நூலின் பெயர் ' காரல் மார்க்ஸ்', எழுதியவர் தமிழ் அறிஞர் 'சாமிநாத சர்மா'. ஆண்டு 1943. கம்யூனிசம் என்றால் என்ன? இந்த கேள்வியை நான் நான்கு பேரிடம் கேட்டிருக்கிறேன். ஒருவர்கூட உருப்படியான பதில் சொல்லவில்லை. (நால்வரும் கம்யூனிஸ்டுகள்). பொதுவுடமை என்கிறார்கள். எதை பொதுவாக்குவது? ஒரு தொழிற்சாலை இருக்கிறது. கடைநிலை ஊழியர்கள், மததியநிலை ஊழியர்கள், மேல்நிலை ஊழியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சம்பளம். இதில் எப்படி பொதுவுடமைக் கொள்கையை அமுல்படுத்துவது? அல்லது ஒரு உதாரணத்தோடு சொல்லுங்களேன் என்பேன் நான். கம்யூனிசம் தொடர்பான நூல்களில் ஒரு முக்கிய குறைபாட்டை எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நேரடியான,புரிந்து கொள்ள கடினமான மொழிபெய்ர்ப்பு, ஆர்வமற்ற எழுத்து நடை இவற்றுடன் வறண்டுபோன பாலைவனம் போல கம்யூனிசம் தொடர்பான நூல்கள் காட்சியளிக்கின்றன. மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்றொரு நூல் இருக்கிற்து. படித்து பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். திரு.அருணன் என்பவரின் புத்தகங்கள் இதற்கு விதிவிலக்கு. சாமிநாத சர்மா அவர்கள் எளிய தமிழில், உயிரோட்டமான நடையில் காரல் மார்க்சின் அடிப்படை தத்துவங்கள் கூட விளங்குமாறு எழுதியிருக்கிறார். சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
Comments
Post a Comment