காதலின் ரகசியம் . .



Love's Secret எனும் தலைப்பில் William Blake என்பவர் எழுதிய ஆங்கிலக் கவிதையின் அடியேனின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு. காதல் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

சொல்லாத வரை 
காதல் 
மனதிற்குள் 
தென்றல் போல 
இதமாக வீசிக் கொண்டிருந்தது. . 
ஒரு நாள் 
என் காதலை அவளிடம் 
உரக்கச் சொல்லிவிட்டேன்.
அதன்பிறகு தென்றல் 
வீசவே இல்லை. . . . !

Comments