முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்
நடந்த ஒரு மூளை-நரம்பியல் (Cognitive Neuroscience) ஆராய்ச்சி, எல்லோருக்கும்
தெரிந்த - பலருக்கு உவப்பான - சிலருக்கு கசப்பான ஒரு உண்மையை தெரிவித்தது. Jonstone & Percival என்ற இரு அறிவியல் வல்லுநர்கள்
நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் விரிவுரைகளை கண்டுகேட்டு ஆராய்ந்ததில்
அவ்வுண்மை புலப்பட்டது. ஒரு வாத்தியார் 60 நிமிடங்கள் பாடம் எடுக்கிறார்
என வைத்துக்கொள்ளுங்கள், ஒரு மாணவனால் தொடர்ந்து அதிகபட்சம் 18 நிமிடங்கள்தான் கவனிக்க முடியுமாம். பாடம் முடியும் தறுவாயில் சுத்தமாக
கவனம் சிதறி விடுகிறதாம். அதுமட்டுமின்றி, ஒரு ஆசிரியர் நடத்துவதிலிருந்து
மாணவர்கள் கற்றுக்கொள்வதில்லையாம். ஒவ்வொரு தனிமனிதனின் ஜீன்களிலும்
பலதரப்பட்ட அனுபவங்களும், ஞாபகங்களும் பதிந்துள்ளன. அவைகளைப்
பொறுத்து(Based on that) ஒருவர் சிலபல தகவல்களை(Information) உள்வாங்கி
வைத்துக்கொண்டு - பிறகு தன் தனித்தன்மைக்கேற்ப, மனத்திற்குள்ளாக அலசி
(Learning) கற்றுக்கொள்கிறார்.
இவைபோன்ற
ஆராய்ச்சி முடிவுகள் நம்முடைய கல்விமுறை எந்த அளவு ஸ்ட்ரெச்சர் கேஸ்
என்பதை உணர்த்துகிறது. ஆசிரியர்-மாணவர் உரையாடல்கள்(Teacher-Student Interaction), நிகழ்கால
பிரச்சினைகளை ஆராய்தல்(Case study), பாட புஸ்தகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும்
உள்ள இடைவெளியை குறைப்பது(Technical seminars of Industry professionals) போன்றசில அவசர முடிவுகளை எடுக்க
வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ப.லிங்கேஸ்வரன்.
01/03/2014.
Comments
Post a Comment