எனது வாழ்க்கை சங்கல்பம். .!



நீண்ட நாள் வாழ்ந்திடுவேன்! நல்லறிவு 
--- நற்குணங்கள் பல பெற்று தாமதமே 
ஆண்டுபல கழிந்தாலும் சான்றோன் எனும்பெயரை 
--- பெற்றோருக்கு ஈட்டித் தருவேன்! கருத்துக்கும் 
கண்ணுக்கும் இனிதான பெண்ணை மணந்து 
--- என்ன தவம் செய்தேனோ என அவள்  
எண்ணும்படி நடந்திடுவேன்! இருவரின் தெய்வீக 
--- அன்பில் தழைக்கும் மழலைகளை உலகுக்கே 
தொண்டு செய்ய வளர்த்திடுவேன்! நாளுக்கு 
--- நாள் மனக் களங்கங்கள் நீக்கி உள்நோக்கி 
கண்ட இறைநிலை உணர்ந்து நானே அதுவாகி 
--- இல்லறஞானி எனும் நல்லபெரும் பேறடைவேன்!  

ப.லிங்கேஸ்வரன்.
01/02/2014.
(Poem Inspired by Vethathiri Maharishi's Life)

Comments