சித்திர விழியார் நெஞ்சம் . .



விவேக சிந்தாமணி என்ற தமிழ் நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன் அல்லது பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நூலை தொகுத்தவர் அடையாளம் தெரியவில்லை. புரிதற்கு எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் ஆங்காங்கே சிலபல வியப்பூட்டும் உவமைகளும், அறிவுரைகளும் தென்படுகின்றன. வேசி மோகம், பொருளிலார்க்கு இன்பமில்லை, காம வெறி கோபம் இவற்றால் விளையும் இடுக்கண்கள், மன்னன்-பெற்றோர்-பிள்ளைகளுக்கு முத்தான சில அறிவுரைகள் இவைகள் பொதுவாக நூல் முழுக்க விரவி காணப்படுகின்றன.

உதாரணமாக, 
பெண்களின் மனத்தை ' சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை. .' என அழகான வார்த்தைகளில் வர்ணிக்கிறது.

வாழ்க்கையில் படும் அல்லல்களில் நொந்து துவண்டு,
'அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம். . ' என்கிறது.

மேலும்,
'செம்மையாக அறம்செய்யார் திரவியம் சிதற வேண்டி 
 நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தாவாறே. . '
நேர்வழியில் சேர்க்காத செல்வம் விபச்சாரியிடமும், குடியிலும், சூதிலும் சிதறி செலவாகிப்போகும் என்பதே இக்கவியின் பொருள். இது ஒரு விலைமாது தன் தோழியிடம் சொல்வதாக அமைந்துள்ளது. தமிழ் ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இப்புஸ்தகத்தின் விலை ரூ 70 (கற்பகம் புத்தகலாயம், தி.நகர், சென்னை).

Comments