முதுகில் குத்துதல், போட்டு கொடுத்தல், வேட்டு வைத்தல், கவிழ்த்து விடுத்தல் போன்றபல ஜாலவித்தைகள் நிறைந்த பூவுலகில் யார் சிநேகிதர், யார் சத்ரு என்றே தெரியவில்லை. இன்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் சுமூக உறவு இல்லாமல் ஒரு பயந்த நிலையிலே உளத் தடுப்புகளும்(Psychological safeguard and Mask), முகமூடிகளும் அணிந்தே உலா வருகிறார்கள். மனத்தில் எந்தவித இறுக்கமோ, முகமூடியோ இல்லாமல், மனம் விட்டு சுதந்திரமாக ஒருவரிடம் பேசமுடியுமானால் அது கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் மட்டும்தான். அப்படி ஒரு கணவனோ, மனைவியோ அமையாத வாழ்க்கை சாபக் கேடுதான். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் கதைநாயகன், நாயகியிடம் 'நான் உன்னைப் பார்கக வரும்போதுதான் ஆயுதம் (Weapon) இல்லாமல் வருகிறேன்' என்கிறான். இந்த வார்த்தையில் ஒரு ரகசியம் அடங்கியிருக்கிறது.
திண்டுக்கல்
18/12/2013.
Comments
Post a Comment