திருமணம் என்றால் என்ன . . ?






சித்தர்கள் உங்கள் திருமணத்தை தடுத்து தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்கள் ஆனால் நீங்களோ திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறீர்கள் என்றார் நான் வழக்கமாக கன்சல்ட் செய்யும் சித்த மருத்துவர். நான், இல்ல ஸார் ஆன்மீகம் எப்போதும் மனதிற்குள்ளேயே இருக்கிறது, திரும்பி வருவேன் என்றேன். திருமணம் ஆகாமல் இருப்பது பெரிய தடைக்கல்லாக இருக்கிறது என்றேன். வாழ்த்துக் கூறி அனுப்பினார். 


திருமணம் என்பது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஒரு வலுவான அடிப்படை தேவையாகும். காலா காலத்தில் திருமணம் ஆகாவிட்டால் மனித உந்து சக்தியானது (Motivation or Drive) தேக்கமோ, திசைமாற்றமோ அடைந்துவிடும். இது வாழ்க்கைக்கு நல்லதல்ல. திருமணம் என்பதை பெரும்பாலோர் பாலுறவு தொடர்பான விஷயமாகவே நினைக்கிறார்கள். இது தவறு. மேலும் சிலர் பாலுறவை பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக நினைக்கிறார்கள். இது அதைவிட பெரிய தவறான கருத்தாகும். பாலுணர்வு உடல் மற்றும் உள்ளம் முழுவதும் பரவியிருக்கிறது. அதனால்தான் சில ரிஷிகள் இதை ஒரு கலை போன்றே கருதினார்கள். 


அன்பு(Love), உதவி(Help), அரவணைப்பு(Emotional warmth), ஆறுதல், நம்பிக்கை(Faith), ஊடல் கூடல் இவை போன்ற பல பகுதிகள்(Components of marriage life) இணைந்ததுதான் மணவாழ்க்கை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். அடம் பிடிப்பவர்கள் தோல்வியடைகிறார்கள். சரியாக கூறவேண்டுமானால், கணவன்-மனைவி என்பதே ஒரு நட்பு(Divine friendship) என்பதை தவிர வேறில்லை. இந்த நட்பு சரியாக வாழ்வில் அமையப்பெற்றவர்கள் வாழ்வில் ஒருவருக்கொருவர் ஊக்கம் தந்து முன்னேற்றம் காண்பார்கள்.

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி மூன்று மந்திரங்களை கூறுகிறார். அவை:

1. விட்டுகொடுத்தல் 
2. பொறுமை / சகிப்புத்தன்மை 
3. தியாகம். 

விட்டுகொடுத்தல் 
சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுகொடுத்தல், வளைந்துக்கொடுத்தல்.

பொறுமை / சகிப்புத்தன்மை 
சில நேரங்களில் சில சங்கடங்கள் வரும்போது பொறுத்துக்கொண்டுதான் போக வேண்டும். அதற்கும் மேல் சில நேரங்களில் நமக்கு பிடிக்காத விஷயங்கள் சகித்துக் கொள்ளவும் வேண்டும். சரியான நேரத்தில் நாசூக்காக எடுத்துக்கூறி திருத்திவிடலாம். காரியம் ஆக வேண்டுமே.

தியாகம் 
தியாகம் என்பது நம்முடைய உரிமையையே விட்டுக்கொடுப்பது. இது என்னுடைய் பொருள்தான், ஆனா பரவாயில்ல நீயே வச்சுக்க. 


இவையெல்லாம் கடைபிடிப்பதினால் நாம் மிகவும் குனிந்து போகிறோம் என்பதோ, கோழை என்றோ அர்த்தமல்ல. வரப்போவதெல்லாம் லாபம்தான். இதைவிட திருமண வாழ்வை இனிமையாகி கொள்ள வேறுவழியில்லை. வேண்டுமானால் Psychologist யாரிடமாவது கேட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

- ப.லிங்கேஸ்வரன் 

Comments

  1. விதியை மதியால் வெல்லவே முயற்ச்சித்து வென்றவர்கள் கூறினார்கள் என் மதிநுட்பத்தாலேயே ஜெயித்தேன் என்று அவர்களுக்கு மதிநுட்பமான ஞானம் அமைந்ததே விதி தான் என மறந்து....!!

    தோற்றவர்களுக்கு மதியில்லாமல் அல்ல...!!
    தோற்பது தான் விதியின் மதியே அவர்களுக்கு

    வெற்றி தோழ்விக்கான விளையாட்டு அல்ல திருமண பந்தம்
    கர்ம வினைபயனே தூரத்து உறவு போல வாய்த்து விடுகிறது அனைத்து வித பந்தமும்...��

    ReplyDelete
  2. விதியை மதியால் வெல்லவே முயற்ச்சித்து வென்றவர்கள் கூறினார்கள் என் மதிநுட்பத்தாலேயே ஜெயித்தேன் என்று அவர்களுக்கு மதிநுட்பமான ஞானம் அமைந்ததே விதி தான் என மறந்து....!!

    தோற்றவர்களுக்கு மதியில்லாமல் அல்ல...!!
    தோற்பது தான் விதியின் மதியே அவர்களுக்கு

    வெற்றி தோழ்விக்கான விளையாட்டு அல்ல திருமண பந்தம்
    கர்ம வினைபயனே தூரத்து உறவு போல வாய்த்து விடுகிறது அனைத்து வித பந்தமும்...��

    ReplyDelete

Post a Comment