கலங்கினேன் மனம் நொந்தேன் கவலைகளைக்
---- கண்டு திகைத்தேன் செய்வ தறியாமல்
விலங்கினப் பிறப்பே மேலென்று எண்ணினேன்
---- மனிதப் பிறவியின் மாண் பறியாமல்
பலவாறாக சிந்தனைகள் சிதறி ஓடியதை
---- தடுத்து நிறுத்தி மிகஅரிய மனவளக்
கலைஎனும் உயர்யோகம் அருளி எனை
---- ஆட்கொண்ட குருவே என் அன்பே !
- ப.லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment