திண்டுக்கல் இலக்கிய கழகமும், தென்னிந்திய புத்தக சங்கமும் இணைந்து திண்டுக்கலில் அக்டோபர் 04 முதல் 13 வரை ஒரு புத்தக கண்காட்சியை நடத்தியது. புத்தக கண்காட்சியில் நீங்கள் நுழைந்தவுடன் எங்கிருக்கிறோம் எனும் பிரக்ஞையை சட்டென மறந்துவிடும் அனுபவத்தை பெற்றிருக்கலாம். அதற்கு காரணம், புலன்கள்(கண்) வழியாக மனம் விரிந்து அத்தனை வண்ண வண்ண புததங்களாகவும், அதன் தலைப்புகளாகவும் மாறும்போது, உடற்செல்களும் மூளைசெல்களும் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் சிலநிமிடங்களுக்கு நிதானம் (Hibernation) தவறிவிடுகின்றன.
ரூ 2000 மேல் புத்தகம் வாங்கும் அன்பர்களுக்கு 'நூல் ஆர்வலர்' சான்றிதழ் அளித்தார்கள். நான் வாங்கிய புத்தகங்களை பரிசீலித்து எனக்கு 'நூல் பித்தர்' என சான்றிதழ் வழங்க உத்தேசித்து இருக்கிறார்கள். நான் வாங்கிய புத்தங்கள் பின்வருமாறு:
1. உளவியல் மேதை சிக்மண்டு பிராய்ட்
(எம்.ஏ.பழனியப்பன், செண்பகா பதிப்பகம், மெட்ராஸ்)
2. நான் கடவுள் - தத்துவ தவ நூல்
(பரஞ்சோதி மஹான், உலக சமாதான ஆலயம், திருவோற்றியூர்,
மெட்ராஸ்)
3. குறும்தொகை-ஓர் எளிய அறிமுகம், 401 காதல் கவிதைகள்.
(சுஜாதா, உயிர்மை பதிப்பகம்)
4. கமல் - நாம் காலத்து நாயகன்.
(மணா, உயிர்மை பதிப்பகம்)
5. Albert Einstein - The Revolutionary Scientist and His Ideas.
6. Mental Disorders - Misconceptions and Realities
(National Book Trust, Madras)
Comments
Post a Comment