சில நாட்களாக பாரதியார் கட்டுரைகள் என்ற நூலை படித்து படித்து எனக்கு ரத்த கொதிப்பே அதிகமாகிவிட்டது. சமூக அவலங்களின் மீதான தனது ஆவேசத்தையும், மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்தையும் அப்படியே படிப்பவர்களின் மனத்திற்கு கடத்தி விடும் அபூர்வ எழுத்துக் கலை பாரதியாருக்கு வாய்த்திருக்கிறது. தாயுமானவர், திருவள்ளுவர் பாடல்களில் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.
பாரதியார் கோபத்தை கட்டுப்படுத்த தன் வாய்க்குள் ஜாதிக்காயை வைத்திருப்பாராம். சிலர் கஞ்சா அடித்தார் என்கிறார்கள். ஒருசில க்ரொமாசோம் ஆராய்ச்சியாளர்கள் பாரதியார் ஒரு Mentally challenged person என்கிறார்கள். அவரின் சிந்தனை-கவிதை மட்டுமன்றி தத்துவம், சயின்ஸ், சமூகம், அரசியல், கல்வி சீர்திருத்தம், இலக்கியம், மதங்கள், பன்மொழி என சகலததுறைகளையும் தொட்டு சென்றிருக்கிறது. என்னை பொறுத்தவரை மஹாகவி என்ற விளிப்பு பாரதியாருக்கு சற்று கம்மிதான்.
- ப.லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment