கர்ப்ப ஸ்தீரியைப் போல் புடைத்த வயிறை பார்த்து பெருமிதம் கொள்வார் அதிவிரைவில் பரலோகம் போகாமல் காக்கும் சஞ்சீவி, ரசம் என்றால் மிகையன்று. ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு,சீரகம்,பூடு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்ற மூலிகைகளே இதற்கு காரணமாம். உண்டஉணவை பக்குவமாக ஜீரணித்து ஸரீரத்தின் பல பாகங்களுக்கும் விநியோகம் செய்து ஈரல், ஹ்ருதயம் முதலிய் உறுப்புகளின் பளுவை குறைக்கிறது ரசம்.
பாரத தேசத்தின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும்-மெட்ராஸ், பம்பாய், டெல்லி, போன்ற் மாகாணங்களிலும் வேளைக்கு ஆகாரமின்றி ஜனங்கள் மாண்டு கிடப்பது ஒருபுறம். மாம்ஸம்,நெய் கலந்த உணவு வகைகளை உண்டு களித்து நகர முடியாமல் நெளிந்து கொடுக்கும் அரசியல்வாதிகள், நடிகர்கள், உழைப்பை சுரண்டி பிழைப்பு நடத்தும் தொழிலதிபர்கள் இவர்கள் ஒருபுறம்.
பருத்த தொந்தி தமது என்றிருக்க - நாய் நரி கழுகு இவையெலாம் தமதுதமது என காத்திருக்கின்றனவாம் என்கிறார் பட்டினத்தார். ஆக நிலைமை இப்படி.
- ப.லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment