உறவுகள் மேம்பட....
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
Get rid of Superiority Complex.
அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.
Avoid Loose talks.
எந்த விஷயத்தைம் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
Follow Diplomacy and Give up.
சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
Tolerance is necessary sometimes.
நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
Avoid Argument that spoils relationships and avoid narrow mindedness.
உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
Dont carry the tales.
மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
Dont be arrogant.
அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
Restrict your needs and needs with a limit. Dont be greedy.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
Talk to everyone relevantly. Avoid loose talks.
கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
Dont believe in what you hear. Enquire fully the matter.
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
Dont magnify the petty matters.
உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
Be relaxed in your opinions and policies. Dont be rigid always.
மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
Dont forget to use pleasant words to all and Dont forget Courtesy.
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்த்தையும், பண்பையும் காட்டுங்கள்.
Be modest in your body language and speech.
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
Open talk.
பிரச்சனைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே சென்று பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.
Come forward to negotiation for resolving the conflicts when with someone.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Comments
Post a Comment