கவிதைகளில் உருகுவதை தற்காலிகமாக சற்று நிறுத்தி விட்டு அறிவியலை தொட ஆசைப்படுகிறேன். Vibration Analysis and Control என்ற ஒரு நடைமுறையில் அதிகமாக பிரயோஜனப்படும் பொறியியல் துறையை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். பொறியியல் வல்லுனர்கள் அதி நுட்பமான அலசல்களை, பல்வேறு சமன்பாடுகளை உருவாக்கி அவற்றை தீர்ப்பதன் மூலம் செய்கிறார்கள். மேல் எழுந்தவாரியாக் பார்க்கும்போது மிகவும் கடினமாக தோன்றினாலும், இதன் ஆதாரக்கருத்து மிகவும் எளிமையானது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்விசிறி, பைக்குகள் முதல் பெரிய பெரிய டர்பைன், ராட்சத இயந்திரங்கள் வரை - எதுவென்றாலும் அவை இயங்கும்பொது அவற்றில் அதிர்வுகள் ( Vibrations ) உண்டாகின்றன. இவ்வதிர்வுகளினால் காலப்போக்கில் இயந்திரங்களில் தேய்மானம் உண்டாகி சீக்கிரமாகவோ அல்லது திடீரெனவொ அவை செயலிழக்கும் சாத்தியக்கூறு உண்டு. விளைவாக மொத்த தொழிற்சாலையே முடங்கி விடும் அபாயமும், அதனால் Repair-களை சரி செய்ய பலமடங்கு பணவிரயமும் ஏற்படுகிறது. இதற்காக ஒரு இயந்திரத்தின் அதிர்வுகளை முன்கூட்டியே அலசி (Analysis), அவற்றால் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள விரிசல்கள், இடப் பெயர்ச்சி போன்றவற்றை முன்கூட்டியே தீர்மானித்து கம்பெனியின் நிர்வாகத்தை உஷார்படுத்துவதே இந்த இயலின் முக்கிய நோக்கமாகும்.
Vibration analysis-ல் பயன்படுத்தப்படும் முறை யூகம் அல்ல. அட்சர சுத்தமான கணித முறையாகும். ஒரு கட்டிடம் அல்லது இயந்திரம் அல்லது சாதனம் இவற்றை விவரிக்கும் ( Equations that describe the characteristics of the particular object ) சமன்பாடுகளை முதலில் உருவாக்குகிறார்கள். பின்பு அவற்றை முறைப்படி கணித முறையில் (Laplace transforms, Numerical methods etc) தீர்த்து அதிர்வுகளின் விளைவுகளை கணிக்கிறார்கள். பொறியியல் பாஷையில் இதனை Vibration diagnosis,analysis and control என்கிறார்கள் (நோயை கண்டறிதல் போல). பூகம்பம், கடல் சீற்றம் இவற்றால் கட்டிடங்களில் உண்டாகும் அதிர்வுகள், பாதிப்புகள் இவற்றை கண்டறிவது Vibration analysis-ன் முக்கியமான பங்களிப்பாகும்.
Comments
Post a Comment