கடவுள் என்
மறதியில் மிகுந்த
அதிருப்தியுற்றார்...
கடவுள் தன்னை
மீண்டும் மீண்டும்
மறந்ததற்காக
கண்டிக்க நினைத்தார்...!
கடவுள் இம்முறை
என்னை தண்டிக்க
ஒரு தேவதையை
அனுப்பினார்...!
அவள் பேரன்பையும்
கண்ணீர் துளிகளையும்
பரிசாக தந்து சென்றாள்...
தனிமையில் யாருமற்று
நான் மெளனமாக
அழும்போது
கடவுள் தன்
அகண்ட பெரு வெளியில்
ஆறுதலாக என்னை
அணைத்துக் கொண்டார்...!
கவிதை: லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment