சமூகம் ரொம்பவே மாறிவிட்டது. 1988,89,90-களில் பிறந்த பெண்கள் திடீரென கல்யாண சந்தைக்குள் நுழைந்து விட்டார்கள். இதில் 1981-ல் பிறந்த என் போன்றவர்களின் பாடு திண்டாட்டம்தான். சரிதாவுடன் பேசும் போது நன்றாக தெரிகிறது.
யோசித்து பார்த்தால் இம்மாற்றம் திடீரென நிகழவில்லை. சத்தமில்லாமல் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் போல, நம்மை பாதிக்கும்போதுதான் சமூகத்தின் இயல்பான இம்மாற்றங்கள் தெரிகிறது.
அசுர வேகத்தில் வளர்ந்து மாறி வரும் தகவல் தொழில்நுட்பம், விரைவான போக்குவரத்து, இளைய தலைமுறையினரின் பார்வையை அகல விரியச்செய்யும் இன்டர்நெட் போன்றவற்றால் பெண்ணொருத்தியின் ரசனை, எதிர்பார்ப்புகள் யூகிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டன . உலகமயமாக்கலின் இரக்கமற்ற இத்தகைய விளைவுகளை சகித்துக்கொண்டு அவ்வப்போது நிலைமையை சமாளிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றே நினைக்கிறேன்.
we are also part of same world but with analytical view point
ReplyDeleteBRIDE. NOT TO BE MADE.
ReplyDeleteJUST TO BE FOUND.
HARI OM.