மாயையில் சிக்கி மதிகலங்கி ஆகாத
--- செயல்கள் செய்து உழல்வதை பெற்ற
தாயைப் போல கருணையுடன் பார்த்திருக்கும்
--- என் இறைவா! மீளாத பிறவி
நோயை போக்கி அழுத்தும் கர்ம
--- வினைகளை மனக் கிலேசங்களை நீக்கி
காய் கனிந்து தரையில் விழுவதுபோல
--- உன்னைச் சேர்ந்து அமைதி பெறுவது எக்காலம்.
கவிதை: லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment