அனைவருக்கும் மனங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சூரியனானது மேஷ ராசியில் நுழையும் நாளே தமிழ் வருடத்தின் முதல் நாளாகும். ராசி என்றவுடன் ஏதோ விநோதமாக நினைத்துவிட வேண்டாம். வானத்தில் காணப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்களை, கொத்து கொத்தாக பிரித்து ஒவ்வொரு கொத்திற்கும் நமது முன்னோர்கள் சூட்டிய பெயர்கள்தாம் ராசிகளாகும். நட்சத்திரங்களை இருபத்தி ஏழு தொகுதிகளாக பிரித்தார்கள். ஒவ்வொரு நட்சத்திர தொகுதியும் ஒரு பெயரால் அழைக்கப்படுகிறது. மொத்தம் 27 நட்சத்திரங்கள். அதாவது தொகுதிகள். பிறகு வசதிக்காக இரண்டே கால் நட்சத்திர தொகுதிகளை ஒன்றுசேர்த்து ஒரு ராசியாக பெயரிட்டார்கள். பன்னிரண்டு ராசிகள்.
தற்போது எல்லோரும் நல்ல படிப்பறிவு பெறும் வாய்ப்பு வசதியை பெற்றுள்ளனர். ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் B.E., M.Sc., MBA வரை வந்துவிடுகிறார்கள். நல்ல சம்பளம் கிடைக்கும் உத்தியோகத்திலும் சேர்ந்து விடுகிறார்கள். அறிவு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி வரவர பழைய கருத்துக்களை புறந்தள்ள தொடங்கிவிடுகிறார்கள். உதாரணமாக ஜாதகம், ஜோசியம் போன்றவை எல்லாம் மூட நம்பிக்கை என்பது பெரும்பாலான படித்தவர்களின் எண்ணமாகும். அவ்வாறு சொல்பவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன், வானத்தில் சூரியன், நிலா, நட்சத்திரங்கள் போன்றவை இருக்கின்றன என நம்புகிறீர்களா? அதிலென்ன சந்தேகம் என்பார்கள்.
உண்மையில் , ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு மூடநம்பிக்கை என நினைப்பதுதான் மூடநம்பிக்கை ஆகும். ஜோதிட சாஸ்திரம் என்பது சுத்தமான வானியல் அறிவு ஆகும். இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் மேலோட்டமாகவோ, அரைகுறையாகவோ எழுதிவிட்டால் மீண்டும் அது மூடநம்பிக்கையாகி விடும் அபாயம் இருப்பதால், சில நாட்களில் விரிவாக ,தெளிவாக ,அறிவியல் கண்களுக்கு விளங்கும் வகையிலேயே எழுதிவிடுகிறேன். சூரியன், நிலா மற்றும் வானில் உலாவும் கணக்கிலாத நட்சத்திர கூட்டங்கள் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ( ரசாயன மாற்றங்கள்), மனதிலும் ( எண்ணங்கள் மற்றும் குனாதிசங்கள் ) பிறந்த நொடிமுதல் மரணம்வரை மாற்றங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கிறது. ஒரு மனிதனின் உயிர் உடலிலிருந்து பிரிவதற்கும் கோள்களே காரணமாக அமைகின்றன. இது பற்றி விரிவாக எழுதுகிறேன். அதுவரை உங்கள் விழிகள் விரிவதற்கு சில ஆச்சர்யமான உண்மைகளை படியுங்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல கலையுணர்வும், அதிக காம உணர்வு உடையவர்களாகவும் இருப்பார்கள். சற்று சுறுசுறுப்பில்லாமல் இருப்பார்கள். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் Energetic ஆகவும், Active ஆகவும் இருப்பார்கள். இவர்களுக்கும் காம உணர்வு அதிகம் உண்டு. சித்திரை மற்றும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடற்கட்டு உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு Ego அதிகம் உண்டு. விசாகத்தில் பிறந்தவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையை அவ்வளவு எளிதில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இவர்களை தங்கள் அழகை திருத்தமாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தமான குணமுடையவர்கள், தாங்களுண்டு தங்கள் வேலையுண்டு என்றிருப்பவர்கள். தானாவே யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். ஆனால் உதவி கேட்டால் செய்வார்கள். புனர்பூசத்தில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாற்றல் உடையவர்கள். இவர்களுடன் யாரும் பேசி ஜெயிக்க முடியாது. மகத்தில் பிறந்தவர்கள் ஆளுமை திறனும், சோர்வில்லாமல் வேலை செய்யும் திறனும் ( அந்த வேலை அல்ல !) உடையவர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபிகள். எரிந்து விழுவார்கள் பின்பு அதற்காக வருத்தப்படுவார்கள். ரோகிணியில் பிறந்தவர்கள் அடக்க ஒடுக்கமாக எந்த வம்புதும்புக்கும் போகாமல் இருப்பார்கள். ஆன்மீக ஈடுபாடு கூட இருக்கும்.
நா உங்களுடய அடுத்தக் கட்டுரைக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.மற்றும் எனக்கு ஒரு சந்தேகம்
ReplyDelete( அந்த வேலை அல்ல !)
இதுக்கு மேல இருக்குற வேலை தான அர்த்தம்