மலரினும் மெல்லிது காமம் சிலர்-அதன்
செவ்வி தலைப்படு வார்.
காட்டுத்தனமாக செக்சில் ஈடுபடாமல், நிதானமாக மென்மையாக காமத்தை நுகரவேண்டும். ஒருசிலரே இந்த உண்மையை அறிந்தவர்கள் என்பதே இத்திருக்குறளின் பொருள்.
மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உடலுறவில் ஈடுபடும்போது, மூச்சு வெளியேறும் அளவும் வேகமும் அதிகமாகி உடலிருந்து Vital Force
அதிகளவு செலவாகிறது. உடல் சூடும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக நாளடைவில் நரம்புகள் தளர்ந்து, மூளை மழுங்கி , உடல் சோர்வுற்று ஆயுள் குறைந்து விடும்.
திருவள்ளுவர் சாதாரணமான மனிதர் அல்லர். அவர் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு). அழகும் அன்பும் ஒருங்கே வாய்ந்த ஒரு பெண்மணியுடன் (வாசுகி) இல்லறம் நடத்தியவர். வள்ளுவர் எழுதிய ஒவ்வொரு திருக்குறளையும் கட்டுடைத்தால் (De-construction) அவரது பரந்துவிரிந்த அறிவும், சுவையான அனுபவங்களும், நல்ல வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளும் கிடைக்கும். அதனால் திருக்குறளை ஆராய்வது எனக்கு எப்போது பிடித்த ஒரு செயல்.
பெண்கள் மலர்களை போன்றவர்கள். பெண்கள் என்றாலே மென்மைதான். மென்மை என்ற சொல்லிலிருந்துதான் பெண்மை என்ற சொல்லே உருவாக்கப்பட்டது. இரண்டு சொற்களையும் உச்சரித்துப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.
இறைவனின் படைப்பில் ஒரு அற்புதம் உண்டென்றால் அது பெண்கள்தான். ஆண்கள் நீண்ட நேரம் விவாதம் புரிவார்கள். பெண்கள் அப்படியன்றி, விவாதத்தின் நடுவே நிறுத்திவிட்டு சட்டென அமைதியாகி விடுவார்கள். அல்லது மண்டையை ஆட்ட துவங்கி விடுவார்கள். பெண்களுக்கு உள்ளுணர்வு (Intution) அதிகம். பேச்சே இல்லாமல் உள்ளுணர்வு நிலையிலேயே எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. உதாரணமாக, ஒரு பையன் காதலிக்கும் நோக்கில் ஒரு பெண்ணை அப்ரோச் செய்கிறான் என வைத்துக்கொள்ளுங்கள். அது அந்த பெண்ணுக்கு தெரியாமல் எல்லாம் இருக்காது. ஒரு சின்ன பெண் குழந்தையிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றால் கூட அந்த குழந்தையால் அதை உணர்ந்துகொள்ள முடியும். பெண்கள் இல்லாமல் உலகமே கிடையாது.
Comments
Post a Comment